...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
பொதுவாக ஒவ்வொரு ஆலயங்களிலும் மஹா ஸம்ப்ரோக்ஷணம் என்று சொல்லப்படக்கூடிய கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது,
நமது ஹிந்து சநாதன தர்மத்தில் 'ஓமன்' என்று சொல்லப்படக்கூடிய ஒரு சில சமிக்ஞைகள் மூலமாக அந்த ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு,
யாருக்குமே அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபர் மிக முக்கியமான நேரத்தில் வந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு காணாமல் போய் விடுவது, (சமீபத்தில் கூட திருச்செந்தூரில் கடலில் இருந்து பழைய சிலை ஒன்று வெளிப்பட்டபோது இதே போல் ஒரு நிகழ்வு நடைபெற்றது) விமான கலச அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கருடாழ்வார் வானத்தில் வட்டமிடுவது மற்றும் மிக முக்கியமான நிகழ்வாக இறைவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் பல நேரங்களில் ஹோம குண்டம் அல்லது தீபாராதனை காண்பிக்கும் பொழுது ஒரு சில வித்யாசமான ரூபங்களில் இறைவன் தோன்றி அருள் பாலிப்பது ...
என இவை யாவும் ஒரு சமிக்ஞைகளே...
அந்த வகையில் நமது திருநெல்வேலி, சுத்தமல்லி, கொண்டா நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ராகவேந்திர ம்ருத்திகா பிருந்தாவனத்தில்,
16-02-2025 அன்று ஸ்ரீ ஸீதா தேவி ஸஹித ஸ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணர் சிலா ரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவர்களுக்கு கீழே ராம நாமத்தை மட்டுமே அனுதினமும் ஜபித்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ராம தூதன் ஸ்ரீ பக்த வரத ஆஞ்சநேயர் சிலா ரூபமும் அவருக்கு கீழே ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீ குரு ராகவேந்திரர் ரூபமும் ப்ரதிஷ்டாபனம் செய்யப்பட்டது. மறு புறம் வடக்கு நோக்கி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கின்றார்.
பிப்ரவரி 16 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், பட்டாச்சார்யர்களில் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் ஸ்ரீ ராம தூதன் அவரது கதா-வுடன் (அவரது ஆயுதம்) உள்ள ரூபமும் குதிரை ரூபமும் தெரிய வர...
அதுமட்டுமல்லாது இந்த சிறியவன் எடுத்த புகைப்படத்தில்,
முனிவர் ஒருவர் அமர்ந்து தம்புராவை கையில் வைத்திருப்பது போலவும் உடன் அன்ன வாஹனம் போல இருப்பது,
சாட்ஷாத்,
ஸ்ரீ ராமரையே குலதெய்வமாக கொண்டிருக்கும் அந்த ஸ்ரீ குரு ராகவேந்திரரே தம்புராவை மீட்டுவது போல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகிறது... திருக்கோவிலில் இந்த புகைப்படத்தை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்
அதனை மிகத் தெளிவாக இதோ கண் கூடாக நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்...
புகைப்படத்தின் மேல் சொடுக்கி (Click) இன்னும் பெரிதுபடுத்தி (Zoom) பார்க்கலாம்.
பக்தர்களின் வசதிக்காகவும் ரூபம் தெளிவாக தெரிய வேண்டும் என்ற காரணத்தினாலும் புகைப்படத்தில் ஹோமகுண்டம் தவிர பிற இடங்களை நாம் சற்று தெளிவின்மை (Blur) ஆக்கி உள்ளோம்.
மற்றபடி புகைப்படத்தில் எந்தவித வரைகலையும் (NO Graphics) செய்யவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.
பொதுவாக இது போன்ற கும்பாபிஷேக நிகழ்வுகளில் ஏதாவது ஒரு புகைப்படம் என்றாலே அது அபூர்வம், இங்கோ இரு வேறு நபர்களுக்கு வேறு வேறு நேரத்தில் இது போல் காட்சியளித்தால் இது பகவானின் அருட்ப்ரசாதமே அன்றி வேறில்லை என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ ?!?!...
அடடா, இப்பேற்பட்ட கும்பாபிஷேகத்திற்கு செல்லவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவடைவதற்குள் (04-04-2025) ஏதாவது ஒரு நாள் இந்த ஆலயத்திற்கு வருகை புரிந்து நீங்களும் புண்ணியம் பெற்றிடுங்கள்.
ஜெய் ஸ்ரீ ராம்...
ஆலயத்திற்கு செல்லும் வழி (Google Map)...
...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...
....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#MiraclePhoto
#Kumbhabhishekam
#KondaaNagaram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments
Post a Comment