...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... பொதுவாக ஒவ்வொரு ஆலயங்களிலும் மஹா ஸம்ப்ரோக்ஷணம் என்று சொல்லப்படக்கூடிய கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது, நமது ஹிந்து சநாதன தர்மத்தில் 'ஓமன்' என்று சொல்லப்படக்கூடிய ஒரு சில சமிக்ஞைகள் மூலமாக அந்த ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு, யாருக்குமே அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபர் மிக முக்கியமான நேரத்தில் வந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு காணாமல் போய் விடுவது, (சமீபத்தில் கூட திருச்செந்தூரில் கடலில் இருந்து பழைய சிலை ஒன்று வெளிப்பட்டபோது இதே போல் ஒரு நிகழ்வு நடைபெற்றது) விமான கலச அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கருடாழ்வார் வானத்தில் வட்டமிடுவது மற்றும் மிக முக்கியமான நிகழ்வாக இறைவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் பல நேரங்களில் ஹோம குண்டம் அல்லது தீபாராதனை காண்பிக்கும் பொழுது ஒரு சில வித்யாசமான ரூபங்களில் இறைவன் தோன்றி அருள் பாலிப்பது ... என இவை யாவும் ஒரு சமிக்ஞைகளே... அந்த வகையில் நமது திர...