...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம் . நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், " அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு. அந்த வரிசையில் கடந்த மாதம் பிப்ரவரி ... (February 2023) லோகஷேமம் வேண்டி, இரண்டு ஏகாதசிகளிலும் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உலகநலம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த மாத நான்கு சனிக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவராத்திரி அன்று (18-02-2023) சிவாலயங்களுக்...