...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
ஸேவை என்பது பிறர் அறியாவண்ணம் செய்வது / செய்யவேண்டியது என்ற போதிலும், கலிகாலத்தில், தற்போதைய அரசியல் சூழலில், பெரும்பாலான பக்தி கைங்கர்யத்திற்கும் / புண்ணிய விழாக்களுக்கும் அரசு அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழலில் நாம் உள்ளதால், நாம் செய்துவரும் ஒரு சில நல்ல விஷயங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் / ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம்.
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக செய்யப்படும் சேவைகள் அனைத்தையும், "அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம்" நமக்கு இட்ட கட்டளையை ஏற்று மாதம் ஒருமுறை ஆவணப்படுத்தும் நோக்கில் (For Record Purposes) இந்தப் பதிவு.
அந்த வரிசையில் இந்த மாதம் ... (August 2022)
- நமது ஒரு துளி ஆன்மீக அன்பர்களோடு மந்த்ராலயம் சென்று மஹான் ஸ்ரீ குரு ராகவேந்திரர் தரிசனம். (ஆன்மீகப் புனித யாத்திரை) யாத்ரா அனுபவ முழு காணொளி தொகுப்பும் விரைவில் நமது "ஒரு துளி ஆன்மீகம்" Youtube Channel ல் பதிவேற்றம் செய்யப்படும்.
- திருநெல்வேலி, கொண்டாநகரம் ஸ்ரீ குரு ராகவேந்திர பிருந்தாவனத்தில் ராகவேந்திரர் ஆராதனை நிகழ்வினை முன்னிட்டு பரதநாட்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, (14-08-2022) அங்கு நடனம் ஆடிய திருநெல்வேலி, 'தாமிர சபை நாட்டியாலயா' பள்ளிக்குழந்தைகளுக்கு நமது TDRS சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
- கிருஷ்ண பக்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வினை புகைப்படம் / காணொளி மூலம் பதிவு செய்து நமக்கு அனுப்பியவர்களுக்கு நமது TDRS சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இதில் ஆர்வமுடன், பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.
- லோகஷேமம் வேண்டி, இரண்டு ஏகாதசிகளிலும் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உலகநலம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.
- இந்த மாத நான்கு சனிக்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மந்த்ராலய மஹான் ஸ்ரீ குரு ராகவேந்திரர் பிருந்தாவனம்...
...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,
அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...
பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்...
வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம், கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வரிசையில், கடந்த ஆகஸ்ட் மாதம் (August-2022)... (123 - 126-வது வார சனிக்கிழமை)...
"ஆடி" மூன்றாம் சனிக்கிழமை (06-08-2022).
"ஆடி" நான்காம் சனிக்கிழமை (13-08-2022).
"ஆவணி" இரண்டாம் சனிக்கிழமை (27-08-2022).
இந்த சேவைகளை புரிய நமக்கு ஒரு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நமது சிரம் தாழ்ந்த நன்றி...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Annadhanam
#TDRS_Seva
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota
Comments
Post a Comment