ராகு காலம்...நினைவில் கொள்ள ஒரு புதுமொழி...
ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
எந்த ஒரு நல்ல காரியத்தையும், நாம் ராகு காலத்தில் தொடங்குவது கிடையாது. ஒரு நாளில் 01:30 மணி நேரம் (சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை) ராகு கால நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ராகு காலம் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு நேரங்களில் வரக்கூடியது. அதனால், நாம் பொது இடங்களில் இருக்கும் சமயங்களிலோ அல்லது உடனடியாக ஒரு காலண்டர் அல்லது பஞ்சாங்கம் போன்றவற்றை பார்க்க முடியாமல் இருக்கும் பொழுதோ, மிக முக்கியமாக தற்போதைய உயிர்நாடியான மொபைல் நம் கையில் இல்லாமல் இருக்கும் பொழுதோ இதனை எப்படி எளிதாக நினைவில் வைத்துக்கொள்வது ?
இதற்கென காலம், காலமாக ஒரு பழமொழி பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அது ஒரு ஆன்மீக தகவலை விளக்கும் பொழுது, ஆன்மீக சம்பந்தம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு பழமொழி போன்று இந்த சிறியவனுக்கு தோன்றியது.
ஒரு ஆன்மீக தகவலை, ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குவதே சால சிறந்தது அல்லவா ?
சரி, இப்பொழுது பழமொழி மற்றும் புது மொழி இரண்டையும் பகிர்கின்றோம். நமது வாசகர்களுக்கு எது தேவையோ அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்...
சரி, இப்பொழுது முதலில் பழமொழி காண்போம்...
திருநாள் சந்தடியில் வெயிலில் புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமாகுமா ?
இந்த சிறியவனின் சிந்தையில் உதித்த புதுமொழி இதோ ...
திருமாலின் சடாரியே வெற்றி, புஷ்பலோச்சனன் விபூதி, செஞ்சந்தனமே ஞாலம்.
சிறு குறிப்பு: சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று தான் புஷ்பலோச்சனன் என்பது ...
ஞாலம் (உலகம்) என்றும் எடுத்துக்கொள்ளலாம் / ஞானம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்... உங்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம்...
இந்த வாக்கியத்தில் வரும் வார்த்தையில் உள்ள ஒவ்வொரு முதல் எழுத்துக்களும் அந்தந்த தினங்களை குறிக்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும்.
(உ-ம். திருநாள் = திங்கள் கிழமை / செஞ்சந்தனமே = செவ்வாய் )
ராகு காலம் திங்கள் அன்று காலையில் 07:30 மணி முதல் 09:00 மணி வரை என்று தொடங்கி ஒவ்வொரு தினமும் இதில் உள்ள அகர வரிசைப்படி 01:30 மணி நேரம் கூட்டிக் கொள்ளவும். அதுவே அந்தந்த தினங்களுக்கு உரிய ராகு காலம் ஆகும்.
நாம் எப்பொழுதும் பகவான் நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் நமது முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்பொழுது கூட அதனை பின்பற்றியே, ஸ்ரீ ராம், சங்கர், மணிகண்டன், மீனாக்ஷி, காமாக்ஷி போன்ற பெயர்களை வைத்தனர்.
அந்த அடிப்படையில், இந்த பழமொழியையும் நாம் பகவான் நாமத்தை கொண்டே நினைவில் கொள்வோம் என்ற ஒரு சிறிய எண்ணமே இந்த சிறியவனின் நோக்கம்...அதன் பிரதிபலிப்பே இந்த பதிவு ...
என்ன அன்பர்களே, சரி தானே?! ...
கீழே உள்ள Comments பகுதி மூலம், உங்கள் எண்ணங்களையும் தெரியப்படுத்துங்கள்...
...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...
https://www.Youtube.com/OruThuliAanmeegam
....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/EN1898G4Eqh0J2C3AkWLAR
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#RaahuKaalam
#Manthiram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
https://www.Youtube.com/OruThuliAanmeegam
https://chat.whatsapp.com/EN1898G4Eqh0J2C3AkWLAR
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#RaahuKaalam
#Manthiram
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment