ராகு காலம்...நினைவில் கொள்ள ஒரு புதுமொழி... ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... எந்த ஒரு நல்ல காரியத்தையும், நாம் ராகு காலத்தில் தொடங்குவது கிடையாது. ஒரு நாளில் 01:30 மணி நேரம் (சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை) ராகு கால நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ராகு காலம் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு நேரங்களில் வரக்கூடியது. அதனால், நாம் பொது இடங்களில் இருக்கும் சமயங்களிலோ அல்லது உடனடியாக ஒரு காலண்டர் அல்லது பஞ்சாங்கம் போன்றவற்றை பார்க்க முடியாமல் இருக்கும் பொழு தோ , மிக முக்கியமாக தற்போதைய உயிர்நாடியான மொபைல் நம் கையில் இல்லாமல் இருக்கும் பொழுதோ இதனை எப்படி எளிதாக நினைவில் வைத்துக்கொள்வது ? இதற்கென காலம், காலமாக ஒரு பழமொழி பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அது ஒரு ஆன்மீக தகவலை விளக்கும் பொழுது, ஆன்மீக சம்பந்தம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு பழமொழி போன்று இந்த சிறியவனுக்கு தோன்றியது. ஒரு ஆன்மீக தகவலை, ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குவதே சால சிறந்தது அல்லவா ? சரி, இப்பொழுது பழமொழி மற்றும் புது மொழி இரண்டையும் பகிர்கின்றோம்....