மஹா தன்வந்திரி பகவான் ஹோமம். ...நமஸ்காரம்... ...லோக க்ஷேமம் வேண்டி... கடந்த சில நாட்களுக்கு முன்பாக லோக க்ஷேமம் வேண்டி நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" (TDRS Trust) மூலம் நடைபெற்ற "மஹா ம்ருத்யுஞ்ஜெய" ஹோமத்தினை (08-06-2021) தொடர்ந்து, கடந்த வாரம் (24-06-2021) "மஹா தன்வந்திரி பகவான் ஹோமமும்" மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே, பெயர் மற்றும் நட்சத்திரம் பதிவு செய்த அன்பர்கள் அனைவருக்கும், இந்த ஹோமத்திலும் தனித்தனியாக ஸங்கல்பம் செய்யப்பட்டது. ( இது ஒரு ஸேவை மட்டுமே... இதற்கு எந்த கட்டணமும் கிடையாது...) ஹோம நிகழ்வுகள் மற்றும் பூஜை நிகழ்வுகள் அனைத்தும் நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube Channel ல் நேரலையில் ஒளி பரப்பப்பட்டது... அதனை பல்வேறு அன்பர்களும் அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளித்தனர். ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு ... சென்ற முறை போல, இந்த முறை தன்வந்திரி ஹோமத்தினையும், பண்டிட் ஸ்ரீ . ஹரி ஹர ஷர்மா மற்றும் அவரது குழுவினர்கள் மிகவும் ஸ்ரத்தையோடு நடத்தினார்கள்... மேலும், தன்வந்திரி பகவான் மந்திரம் சொல்லி ஹோமம் நடைபெற்றபொழுது, பல்வேறு அன...