புத்ர பாக்யம் அருளும் "புத்ரதா ஏகாதசி" விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....
'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara - January / February) வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "புத்ரதா ஏகாதசி" (Puthradha Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது.
புத்ரதா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்:
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா, மக மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, புத்ரதா ஏகாதசி எனும் இந்த ஏகாதசியின் சிறப்புகளை உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, புத்ரதா ஏகாதசி எனும் இந்த ஏகாதசியின் சிறப்புகளை உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...
ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக தொகுத்துள்ளோம் ...
முன்பொரு காலத்தில், பத்ராவதி எனும் அழகிய நகரை "சுகேத்துமன்" என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு "சைவியா" என்ற அழகான மனைவி உண்டு. அந்த ராஜ்யத்தை நல்ல முறையில் ஆண்டு வந்ததால் மக்களுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் மன்னருக்கும், ராணிக்கும் பெரிய மனக்குறை இருந்தது, அது என்னவென்றால் அவர்களது ராஜ்யம் ஆள அடுத்து வாரிசு இல்லை என்பது தான்.
ஆம், மன்னருக்கு புத்ர பாக்யம் இல்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாக இருந்தது. அவர் தனது முன்னோர்கள் தமக்கு அந்த ஆசியை வழங்கவில்லையே என்ற வருத்தத்தில் பல நாட்கள் இருந்தார். அவரது அரண்மனை வாழ்க்கை அவருக்கு பெரிய மகிழ்ச்சியை தரவில்லை.
இதனை நினைத்து அவர் பூஜைகள், யாகங்கள் செய்திருப்பினும் அதற்கு அவருக்கு பலன் இல்லாமலே இருந்தது. அதனால், மன நிம்மதி தேடி அவர் ஒரு வெண்குதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கானகம் நோக்கி சென்றார்.
கானக சூழல் அமைதியாக இருந்ததாலும், மனதிற்கு ரம்யமாக இருந்ததாலும் கானகத்தில் நீண்ட தொலைவு உள் நோக்கி பயணித்து விட்டார். அருமையான பல வகை மரங்கள், செடிகள், கொடிகள், கனிகளோடு காய்த்து குலுங்கும் நந்தவனம் போன்ற தோட்டத்தினைக் கடந்து சென்றார். அந்த இடத்தில் பல வேர்களைக்கொண்ட அரச மரம் இருந்த இடத்திற்கு வந்தார்.
அங்கு அருமையான ஏரி ஒன்று இருப்பதைக் கண்டார், அதனால் அந்த இடத்தில் நின்றார். சற்று அருகில் சென்று பார்க்கும் பொழுது அங்கு முனிவர்கள் போல் பலர் இருப்பதைக் கண்டார்.
அதனால், அவர்கள் அருகில் சென்று சிரம் தாழ்ந்து அவர்களுக்கு மரியாதையை செலுத்தி, தன்னை அந்த ராஜ்யத்தின் மன்னர் என அறிமுகம் செய்துகொண்டு அவர்களைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். முனிவர்களே, தாங்களெல்லாம் யார், இந்த இடத்திற்கு எதனால் வந்தீர்கள் என்று கேட்டான்.
அவர்களும், மன்னா நாங்கள் "விஸ்வாதி தேவர்கள்", புண்ய நாளான இன்று, ஸரோவர் போன்ற மங்களமான இந்த நீரில் நீராட வந்தோம் என்று கூறினார்கள். மேலும், அவர்கள் மன்னரே உமது முகம் மிகவும் சோகமாக உள்ளதே, அதற்கான காரணம் என்ன என்றும் கேட்டனர்?
மன்னரும், தமது புத்ர பாக்ய வேண்டுதலை அவர்களிடம் தெரிவித்தார். உடனே, அவர்கள் மன்னா, கவலை கொள்ள வேண்டாம், இன்று பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு ப்ரியமான "புத்ரதா ஏகாதசி" தினம். அதன் காரணமாகவே விரதம் இருப்பதற்கு முன்பாக நாங்கள் இங்கு நீராட வந்தோம். நீங்கள் இன்று ஒரு நாள் உணவின்றி விரதம் இருங்கள், உங்களுக்கு புத்ர பாக்யம் உண்டாகும் என்று கூறினர்.
மன்னரோ, விரக்தியின் உச்சத்தில் இருந்ததனால், நான் ஏற்கனவே பல்வேறு பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்துவிட்டேன், எந்த பலனும் இல்லை, இந்த ஒரு நாள் விரதம் அந்த பலனை தந்து விடுமா என்று கேட்டார்.
அதற்கு, அவர்கள் நீங்கள் இந்த ஒருநாள் விரதம் இருந்து பகவான் ஸ்ரீ ஹரியை மனதார வேண்டுங்கள், உங்களது ப்ரார்த்தனை நிச்சயம் வெற்றியடையும் என்று கூறி வாழ்த்தினர்.
மன்னரும், சற்றே மனமகிழ்ந்து அவர்களுடன் சேர்ந்து நீராடிவிட்டு முழு விரதத்தையும் அனுஷ்டித்தார். இரவில் அவர்களுடன் சேர்ந்து பகவான் ஸ்ரீ ஹரியை நினைத்து பூஜை மற்றும் பஜனைகளில் ஈடுபட்டார். தனது விரதத்தை மிக ஸ்ரத்தையாக நிறைவு செய்துவிட்டு பின்னர் மறுநாள் அவர்களிடம் ஆசி வாங்கி சென்றார்.
பின்னர் அரண்மனை திரும்பிய சில நாட்களிலேயே ராணி "சைவியா" கருவுற்றார். மன்னரும் மிகவும் மகிழ்வுற்றார். பின்னர் முனிவர்கள் ஆசியால் மிக அழகான ஆண் குழந்தையை பெற்றுடுத்தார். மன்னர் ராஜ்யத்தை மேலும் மகிழ்வுடனும், சிறப்பாகவும் ஆண்டு மக்களுக்கு பல நல்லவற்றை செய்தார்.
இதனை, யுதிர்ஷ்ட மஹாராஜாவிடம் கூறிய ஸ்ரீ கிருஷ்ணர்;
எனதருமை யுதிர்ஷ்ட்ரா, மிகவும் சக்தி வாய்ந்த புத்ரதா ஏகாதசி விரதம் இருந்து ஒருவர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு வளமான வாழ்வை அடையலாம், என்றார். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில், பாண்டவர்களே, என்னை மகிழ்விக்கும் இந்த ஏகாதசி விரதக் கதையினைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் பிறருக்கு எடுத்துக் கூறுபவர்களும் மிகுந்த புண்யத்தினை பெற்று இக வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று பின்னர் பர வாழ்வில் முக்தி அடைகின்றனர் என்று கூறினார்.
இவ்வாறு "புத்ரதா ஏகாதசி" விரத மகிமை பற்றி "பவிஷ்ய உத்தர புராணம்" விளக்குகின்றது.
எனதருமை யுதிர்ஷ்ட்ரா, மிகவும் சக்தி வாய்ந்த புத்ரதா ஏகாதசி விரதம் இருந்து ஒருவர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு வளமான வாழ்வை அடையலாம், என்றார். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில், பாண்டவர்களே, என்னை மகிழ்விக்கும் இந்த ஏகாதசி விரதக் கதையினைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் பிறருக்கு எடுத்துக் கூறுபவர்களும் மிகுந்த புண்யத்தினை பெற்று இக வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று பின்னர் பர வாழ்வில் முக்தி அடைகின்றனர் என்று கூறினார்.
இவ்வாறு "புத்ரதா ஏகாதசி" விரத மகிமை பற்றி "பவிஷ்ய உத்தர புராணம்" விளக்குகின்றது.
ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும் 'புத்ரதா ஏகாதசி' தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:
- வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளைகளோ இருக்கலாம்.)
- வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம்.
- (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...
Editors Note:
(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook etc, etc...} ஒவ்வொரு ஏகாதசிக்கும் முதல் நாள் தசமி திதி அன்று 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)
'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்..... (D01)
ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...
பின் குறிப்பு:
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.
வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு, பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும் தெரியப்படுத்தலாம். (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...)
ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment