புத்ர பாக்யம் அருளும் "புத்ரதா ஏகாதசி" விரதம் ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara - January / February) வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "புத்ரதா ஏகாதசி" ( Puthradha Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது. புத்ரதா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்: யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா, மக மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, புத்ரதா ஏகாதசி எனும் இந்த ஏகாதசியின் சிறப்புகளை உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் க