Skip to main content

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'பரம ஏகாதசி' விரதம் ... 

ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை... 

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 


தற்போது வரக்கூடிய ஏகாதசி 'பரம  ஏகாதசி' ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசிஎன்று அழைக்கப்படுகின்றது

 இந்த வருடம்  'அதிக' மாதம் வந்துள்ளது

'அதிக' (Adhika) மாதம், (September/October)  தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்வரக்கூடிய ஏகாதசியே "பரம ஏகாதசி(Parama Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது


பரம ஏகாதசி பற்றி 'ஸ்காந்த புராண' விளக்கம்


யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, மதுஸூதனா,  'அதிகமாதத்தில், கிருஷ்ண  பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், யுதிஷ்டிரா, என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி மகிமை பற்றி உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த  விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

முன்பு 'காம்பில்யா' எனும் நகரில், 'சுமேதா' எனும் மிகவும் பக்திமானாகிய அந்தணர் ஒருவர் இருந்தார்.   அவருக்கு   மிகவும்  கற்புக்கரசியான 'பவித்ராஎனும்  மனைவி இருந்தார்மிகவும்  இளமையானஅழகான கண்களையுடைய அவர் தனது கணவர்  மேல் மிகுந்த பக்தியும்அன்பும் கொண்டவராக விளங்கினார்.

முற்பிறவியில் செய்த வினைகள் காரணமாக சுமேதா-பவித்ரா தம்பதியினர் வாழ்வதற்கு சரியான இடம் இன்றியும்அன்றாட வாழ்க்கைக்குத்  தேவையான அளவு கூட போதிய  உணவின்றி தவித்தனர்.  சுமேதா செல்வந்தர்களிடம் போதிய உதவியை தானமாக பெற்று வந்தாலும்அது அன்றாட வாழ்விற்கே போதுமானதாக இல்லாமல் இருந்தது.

இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும்தனது இல்லத்திற்கு  யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்குபவித்ரா தனது  உணவை அளித்து விட்டு அன்றைய தினம்தான் பட்டினியாக  இருந்து விடுவது வழக்கம்ஆனால்அவரது முகத்தில் எந்த ஒரு  சிறு ()மாற்றமும் இருக்காதுவந்த விருந்தினர்களிடம் புன்னகை  தவழ உரையாடுவார்.

இருப்பினும்பல நாட்கள் இது போல உணவின்றி இருந்து வந்ததால்,பவித்ராவின் உடல் மெலியத் தொடங்கியதுதனது  மனைவியின்   உடல்நிலை கண்டும்தனது வருமானம் இல்லாத நிலை கண்டும்  சுமேதா மிகுந்த மன வருத்தம் கொண்டார்.

சுமேதா தனது மனைவியிடம் தனது வருத்தத்தை தெரிவித்துநமது கர்ம வினை காரணமாக நமக்கு இந்தப் பிறவியில் செல்வம் எனும் பாக்கியம் நமது இல்லத்தில் இல்லாமல் உள்ளது

எனது வருமானத்தின் மூலமோ அல்லது எனக்கு தானமாகக் கிடைக்கும் பொருட்கள் மூலமோ மூன்று வேளை உணவினைக் கூட நாம்  சரியாக உண்ண முடியவில்லைநமது இல்லத்திற்கு வரும்  விருந்தினர்களைக்கூட சரியான முறையில் கவனிக்க முடிய வில்லைஅதனால்நான் வெளியூர் சென்று வேறு ஏதாவது  உத்யோகம் செய்து பொருள் ஈட்ட முயற்சி செய்யலாம் என்று  நினைக்கிறேன் என சுமேதா தனது மனைவி பவித்ராவிடம் கூறினார்.

தமது கர்மவினை காரணமாக இந்தப் பிறவி எப்படி இருப்பினும்  நமது முயற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்முயற்சியே  செய்யாமல் இருக்கக்கூடாது  என்று சாஸ்திரம் கூறியுள்ளதையும்  தனது மனைவி பவித்ராவிடம் சுட்டிக்காட்டினார் சுமேதா.

இதனைக்கேட்ட பவித்ராமிகவும் மன வேதனை கொண்டவராய்தனது கணவரின் கைகளை பற்றிக்கொண்டுஎனது  அன்பிற்குரியவரேஉம்மை விட சிறந்த கல்விமான் இங்கு இல்லைஉம்மை விட சிறந்த பக்திமான் இங்கு இல்லைஇருப்பினும்இந்தப்பிறவியில் நமக்குத் தேவையான செல்வ வளம் கிடைக்காமல் நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

நாம் பூர்வ ஜென்மத்தில் எதனை பிறருக்கு செய்துள்ளோமோ  அல்லது கொடுத்துள்ளோமோ அதனையே இந்தப்பிறவியில் நாம் பெறுகின்றோம்நாம் இருவருமேகடந்த பிறவியில் பிறருக்கு  பெரிய உதவிகளோ அல்லது தானமோ செய்யவில்லை என்று  நினைக்கின்றேன்அதனாலேயே இந்தப் பிறவியில் நமக்கு போதிய செல்வ வளம் கிட்டவில்லை என்பது தெரிகிறது

இந்தப்பிறவியில் ஒருவருக்கு மலையளவு தங்கம் இருப்பினும் கூட,  முற்பிறவியில், பிறருக்கு தானம் எதுவும்  செய்யாமல் இருந்திருந்தால், மலையளவு தங்கம் கூட கரைந்து அவர் ஏழையாகி விடுவார். எனவே, ஒருவர் முற்பிறவியில் பொன், பொருள், மனை, கல்வி என எதனை  பிறருக்கு தானமாக வழங்கினாரோ அவை இந்தப்பிறவியில் அவருக்கு கிடைக்கும் என்று பவித்ரா கூறி மேலும் தொடர்கையில்

நீங்கள் இங்கிருந்து என்னைப்பிரிந்து சென்றால் அது மிகுந்த மனவேதனை தரும். மேலும், உங்களுக்கு உரிய சேவை புரியாமல் இருப்பதையும் நான் விரும்ப வில்லை. எனவே நாம் வேறு உபாயம் காண்போம் என்று பவித்ரா தனது கணவரிடம் தெரிவித்தார்

இதனைக்கேட்ட, சுமேதாவும், சரி அந்த பகவானே நமக்கு அருள் புரியட்டும் என்று தனது வெளியூர் செல்லும் எண்ணத்தை கைவிட்டார்

பின்னர், ஒரு சில தினங்கள் சென்ற பிறகு, அந்த நகருக்கு கௌண்டின்ய முனிவர் வருகை புரிந்தார். அவருக்கு சுமேதா மற்றும் பவித்ரா தம்பதியினர் தங்களது சாஷ்டாங்க நமஸ்காரத்தை தெரிவித்து அவருக்கு ஆசனம் அளித்து அமரச்செய்து உபசரித்தனர். பின்னர் பவித்ரா முனிவரிடம் தனது சந்தேகத்தை வினவினார்

முனிவர்களில் சிறந்தவரேநாங்கள் இந்தப் பிறவியில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் இருப்பினும் எங்களுக்கு போதிய செல்வம் இன்றி ஏழ்மையில் உழல்கிறோம்

ஒருவர் தனது முற்பிறவியில் உரிய தானங்கள் எதுவும் செய்யாமல் இருப்பினும், இந்தப்பிறவியில் செல்வ வளம் பெற என்ன செய்ய வேண்டும் ? அதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஸ்வாமி ஸ்தலம் செல்லவேண்டுமா ? குறிப்பிட்ட ஸ்லோகம் எதுவும் சொல்ல வேண்டுமா ? ஏதாவது குறிப்பிட்ட விரதம் உள்ளதாஎன்ன செய்தால் இந்தப்பிறவியில் புண்ணியம் கிடைக்கும், மற்றும் செல்வ வளம் பெற முடியும் ? தயவு செய்து எங்களுக்கு இதற்குரிய விடை கூறி அருள் புரிய வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறார் பவித்ரா

கௌண்டின்ய முனிவர் கூறிய உபாயம் என்ன ?

சிறிய மௌனத்திற்கு பிறகு கௌண்டின்ய முனிவர்,இவ்வாறு கூறலானார்... தம்பதிகளே, உங்களுக்கு செல்வ வளத்தை அளிக்கக்கூடிய விரதம் "பரம ஏகாதசி" ஆகும். ஆம். புருஷோத்தம மாதம் எனும் அதிக மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி தினத்தில், முழு உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீ ஹரியை துதிப்பதன் மூலம், முற்பிறவியில் உரிய தானங்களை செய்யாமல் இருப்பினும் இப்பிறவியில் செல்வ வளத்தை பெற முடியும்

முன்னர், இது போன்ற ஒரு 'பரம ஏகாதசி' தினத்தில் குபேரன் மிகக் கடுமையாக விரதம் இருந்த முறையினைக் கண்டு, சிவபெருமான் மனம் மகிழ்ந்து குபேரபுரிக்கு அதிபதியாக மாற்றினார்.

மேலும், இந்த பரம ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து அதன் பின்னர் 'பஞ்ச ராத்ரிகா' எனும் 5 தினங்கள் தொடர்ந்து ஒரு வேளை மட்டும் உண்டு விரதம் இருப்பின் அவர்கள் வேண்டுவது கிடைக்கும், அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கப்பெறுவர் . மேலும் அவ்வாறு விரதம் இருப்பவர் 5 வது நாளில் தன்னால் இயன்ற தானத்தை செய்தால் அது அவர்களுக்கு பல மடங்கு பலன் தரும் என்று கூறி அருளினார் கௌண்டின்ய முனிவர்.   

இதனைக்கேட்டு மனமகிழ்ந்த சுமேதா - பவித்ரா தம்பதியினர் முனிவருக்கு மீண்டும் தங்களது நமஸ்காரங்களை தெரிவித்து நன்றி கூறினர். பின்னர் முனிவர் கூறியபடியே 'பரம ஏகாதசி' அன்று முழு உபவாசம் இருந்து அதன் பின்னர் தொடர்ந்து 5 நாட்களும் உபவாசம் இருந்து பகவான் நாமாவை ஜபம் செய்தபடியே இருந்தனர்

சில தினங்களில், அந்த ராஜ்ய அரசன் இந்த அந்தணர் தம்பதிகளை தேடி வந்து, அவர்களுக்கு ஒரு அழகிய இல்லம், பொன், பொருள், தானியங்கள் மற்றும் ஒரு பசு ஆகியவற்றையும் வழங்கினார். பிரம்மதேவர் தனது கனவில் தோன்றி இட்ட கட்டளையை தான் நிறைவேற்றியதாக கூறினார். சுமேதா - பவித்ரா தம்பதியினர் பல காலம் நல்ல நிலையில் வாழ்ந்து பகவான் நாமாவை எப்பொழுதும் ஜெபித்து பின்னர் வைகுண்ட பிராப்தி பெற்றனர்

இவ்வாறு, பரம ஏகாதசி விரதத்தின் மகிமை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துக்கூறினார். இந்த விரதக்கதையினை கேட்டவர்களும், படித்தவர்களும் மேலும் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறியவர்களும் மிகுந்த புண்ய பலனைப்பெறுகிறார்கள் என்றும் கோ தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என்றும் ஸ்காந்த புராணம் எடுத்துரைக்கின்றது

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும்நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'பரம ஏகாதசிதினத்தில் நாம் செய்ய வேண்டியவை

 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்
  • வாய்ப்பு இருப்பவர்கள் தொடர்ந்து 'பஞ்ச ராத்ரிகா' எனும் 5 தினங்கள் தொடர் விரதம் இருக்கலாம்
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம்
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம்
  • (இப்போது சீன வைரஸ் காரணமாகஇருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    

விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  


Editors Note:


(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}ஒவ்வொரு  ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று   'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

ஓம் நமோ நாராயணாய...

ஓம் நமோ வெங்கடேசாய...

 

பின் குறிப்பு:

நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடையஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...) 


ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...

ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா
திருநெல்வேலி... 

Comments

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20) காத்திடுவாய் கா

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக