32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் ' பரம ஏகாதசி ' விரதம் ... ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் ) ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட .... தற்போது வரக்கூடிய ஏகாதசி ' பரம ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika) மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம ஏகாதசி ' என்று அழைக்கப்படுகின்றது . இந்த வருடம் ' அதிக ' மாதம் வந்துள்ளது . ' அதிக ' (Adhika) மாதம் , (September/October ) தேய் பிறையில் ( கிருஷ்ண பட்சம் ) வரக்கூடிய ஏகாதசியே " பரம ஏகாதசி " (Parama Ekadasi) என்ற...