திருச்செந்தூர் ஆவணித் திருநாள் நேற்று (06-09-2020) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று (07-09-2020) நாம் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் சிலரோடு, முருகனை தரிசிக்க சென்றிருந்தோம்.
தற்போதைய தரிசன நடைமுறை பற்றி ஒரு சிறு விளக்க குறிப்பு ...
தற்போதைய தரிசன நடைமுறை பற்றி ஒரு சிறு விளக்க குறிப்பு ...
ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட் பரிசோதனை. (இரண்டு இடங்களில்)
டிக்கெட் பிரிண்ட் அவுட் இருப்பது நன்று. இல்லாவிட்டால், டிக்கெட்டை அவர்களிடம், மொபைலில் காண்பித்து விட்டு, அவர்கள் தகவல்களை எழுதும் வரை, நாம் காத்திருக்க வேண்டும்.
ஆதார் கார்டு பரிசோதனை. (இரண்டு இடங்களில் ))
(கட்டாயம் கொண்டு செல்ல வேண்டிய ஆவணம்.)
IR தெர்மோமீட்டர் பரிசோதனை. (இரண்டு இடங்களில்)
பின்னர், சானிடைசர்.
அதன் பின்பு வரிசையில் தரிசனம்.
ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன், ஆனால், விரைவில் தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தோம். (10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்)
வெகு குறைவாக, மிக சொற்பமான அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.
கடலுக்கு செல்ல முடியாது.
நாழிக்கிணறு செல்ல முடியாது.
உள் பிரகாரம் எங்கும் செல்ல முடியாது.
வேறு எந்த சன்னதிக்கும் செல்ல முடியாது.
கோவிலின் முகப்பு பகுதிக்கு முன்பு கூட செல்ல முடியாது.
கட்டுப்பாடுகள் வெகுவாக உள்ளதாலும், (சாதாரண தரிசனம் கூட) ஆன்லைன் மூலம் நமது ஆதார் தகவல்கள் பதிவு செய்து டிக்கெட் பெற்ற பின்னரே தரிசனம் செய்ய முடியும் என்பதாலும் பக்தர்கள் எண்ணிக்கை மிக, மிக சொற்பமான அளவிலேயே இருந்தது. (நாங்கள் தரிசனம் செய்ய சென்றது காலை 09:00 முதல் 11:30 மணி slot-ல்)
பணியில் இருக்கும் அலுவலர்களிடம் விசாரித்ததில், மற்ற நேரங்களிலும் குறைவான கூட்டம் இருப்பதாகவே தெரிவித்தனர்.
இலவச தரிசனம் மற்றும் ரூபாய் 100 கட்டண தரிசனம் உண்டு. இலவச தரிசனத்திலேயே 10 முதல் 15 நிமிடத்தில் தரிசனம் முடித்து வந்து விடலாம். (இன்றைய தினத்தில் நாங்கள் வந்து விட்டோம்...)
கோவில் பற்றிய ஒரு சிறிய காணொளி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
கந்தர் கலிவெண்பா காணொளி காண இங்கு கிளிக் செய்யவும்...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
கந்தர் கலிவெண்பா காணொளி காண இங்கு கிளிக் செய்யவும்...
இதனையும் படிக்கலாமே ...
ஸ்ரீ ராமரிடம் இருந்து என்ன கற்க வேண்டும் ?
இரத்த அழுத்தம் / தலை சுற்றல் - நீங்க ஆயுர்வேதம் கூறும் எளிய வழிமுறை என்ன ?
நன்றி...
ஸ்ரீ ராமரிடம் இருந்து என்ன கற்க வேண்டும் ?
இரத்த அழுத்தம் / தலை சுற்றல் - நீங்க ஆயுர்வேதம் கூறும் எளிய வழிமுறை என்ன ?
நன்றி...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி.
திருநெல்வேலி.
Comments
Post a Comment