32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'பத்மினி ஏகாதசி' விரதம் ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... தற்போது வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது. 'அதிக' (Adhika) மாதம், (July / August ) வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பத்மினி ஏகாதசி" (Padmini Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது. பத்மினி ஏகாதசி பற்றி 'ஸ்காந்த புர...