குறட்டை விடுதல் (Snoring) என்பது ஒரு நோயல்ல. ஏனென்றால் அதனால் ஒருவர் துன்புறுவதில்லை. ஆனால், அவர் அருகில் உள்ளவர்கள் துன்பப்படுகிறார்கள்.
குறட்டை வருவதற்கான காரணம் யாவை ?
அதைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய
வேண்டும்?
காரணங்களில் முக்கியமானது பொடி போடுதல். பொடியை மூக்கினுள் அடிக்கடி சர் என்று போட்டு இழுப்பதால் மூக்கினுள்ளே உள்ள ஈரப்பசை காய்ந்து விடுகிறது. மூக்கின் வறட்சியான பாதையினுள் செல்லும் சூடான, தூசியுடன் உள்ள காற்று மேன்மேலும் வறட்சியை தோற்றுவிக்கிறது. வறட்சியான மூக்குத் துவாரத்தின் வழியே செல்லும் காற்று சப்தத்தை தோற்றுவிக்கிறது.
உணவில் வறட்சியை தோற்றுவிக்கும்
கடலை, பயறு,
பருப்பு போன்றவைகளை
தணலில் வாட்டி
பொறிகடலையாகவோ, சுண்டல் அல்லது வடையாகவோ அடிக்கடி
சாப்பிடுதல், அவைகளை சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை
அருந்துதல், காரம், கசப்பு துவர்ப்புச் சுவை
கொண்ட உணவு
வகைகளை அடிக்கடி
உணவில் சேர்த்தல்,
அதிக உடல்
உழைப்பு, இரவில்
அதிக நேரம்
கண்விழித்து பிறகு படுக்கச் செல்லுதல் போன்றவைகளால்
குடலில் வாயுவின்
ஓட்டம் அதிகப்படுகிறது?
வாயுவின் சீற்றம்
மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் உணர்கிறது. இதனாலும்
ஒருவருக்கு குறட்டை ஏற்படலாம்.
இதர பழக்க வழக்கங்கள்...
அதிக தூரம்
வெயிலில் நடப்பது,
நீண்ட தூர
பயணங்களை இரு
சக்கரவாகனத்திலும் பஸ்ஸிலும் செய்வது,
மனதில் ஏற்படும்
பல வகையான
கவலைகள், இயற்கையாக
ஏற்படும் உந்துதல்
சக்திகள் மூலம்
வெளியேற முயற்சிக்கும்
மல, மூத்திரங்களை
உதாசீனப்படுத்தி அடக்கி விடுதல், அதிக பட்டினியிருத்தல்,
தலையில் அதிக
பாரங்களை சுமத்தல்,
போன்ற செயல்களாலும் ஏற்படும் வாயுவின் சீற்றம்,
குறட்டையை ஏற்படுத்தும்.
உடல் சூட்டின் காரணமாக தலையில்
உள்ள கபம்
உருகி மூக்கின்
பாதையை அடைப்பதால்
வாய் வழியாக
தூக்கத்தில் உள்ளிழுக்கப்படும் காற்று மூக்கின் சிறு
வழியாக வெளியேற
எத்தனிக்கும் போதும் குறட்டை ஒலியாக
வெளியேறும்.
சரி, இதற்கு தீர்வு தான் என்ன ???
குறட்டை ஒலியை குறைப்பதற்கோ அல்லது
நிறுத்துவதற்கோ தலையில் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்
விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணெய், மிளகு, சீரகம்,
சித்தரத்தை போட்டு காய்ச்சி இளஞ்சூடாக தலை உச்சியில் பஞ்சில் நனைத்து சிறிது நேரம் போட்டு வைக்க
வேண்டும். ஆண்கள் புதன், சனி தலையில் எண்ணெய் தேய்க்கவேண்டும். சுமார்
அரைமணி முதல்
முக்கால் மணிவரை
ஊறிய பிறகு
வெது வெதுப்பான
நீரில் ஸ்நானம்
செய்து அன்று
மதியம் உணவில்
மிளகு அல்லது சீரக ரஸத்தையும்,
மோர்க்குழம்பையும் சூடான சாதத்துடன்
உண்ணவேண்டும்.
சுவைகளில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவையை
சற்று தூக்கலாக
பயன்படுத்தினால் குடல் வாயு மட்டுப்படுகிறது.
மூக்கினுள் இரண்டு சொட்டு நல்லெண்ணையை காலையில்
பல்தேய்த்த பிறகும், அதுபோலவே இரவிலும் பல்
தேய்த்த பின்னர் விடுவதாலும்
மூக்கினுள் நெய்ப்புத்தன்மை ஏற்படுவதால்
காற்றின் ஓட்டம்
சத்தமின்றி நடக்கும்.
வால்மிளகை ஊசியால் குத்தி நெருப்பில் காட்டி வரட்டும் புகையை மூக்கினுள் உறிஞ்ச கபத்தின் அடைப்பு நீங்கி விடும். காற்று சீராக செல்லும்.
இரண்டு சிறிய ஸ்பூன் (10 ml) அளவில் நெய்யை உருக்கி சூடான சாதத்துடன் கலந்து சிறிது கொத்தமல்லி எனும் தனியா தூளை அதில் சேர்த்துச் சாப்பிடலாம். மலச்சிக்கல் இல்லாதவாறு இரவில் உணவை சூடாகவும், எளிதில் ஜீரணிக்கும் வகையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, நமது உணவுப்பழக்கத்தையும், நமது வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டால், குறட்டை விடுபவர்கள் அந்த பழக்கத்தை அறவே நிறுத்தி, அவர்கள் மட்டும் நிம்மதியாக உறங்குவதின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களும் நிம்மதியாக உறங்க வழிவகை செய்யலாம்.
தகவல் உதவி: Thanks to : Sri Jayendra Ayurvedhic Hospital.
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தகவல் உதவி: Thanks to : Sri Jayendra Ayurvedhic Hospital.
ஓம் நம ஷிவாய... ஹரி ஓம்...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி...
நன்றி...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி.
திருநெல்வேலி.
Comments
Post a Comment