இந்தக் கட்டுரையில்... விநாயகரை வழிபட எளிய மந்திரம்? எந்த நட்சத்திரக் காரர்கள் எப்படி வழிபட வேண்டும்? நினைத்ததை அடைய எவ்வாறு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் ? முக்கியமான மெகா கணபதிகள் பற்றி சிறு தகவல். விநாயகர் சதுர்த்தி என்றாலே, நாம் அருகில் உள்ள பல விநாயகர் கோவிலுக்கு செல்வது வழக்கம். வித விதமான அலங்காரங்களில் ஆனை முகத்தா னை பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு அழகு தான்... ஒரு சில முக்கியமான விநாயகர் கோவில்கள் பற்றி இங்கு காண்போம். மெகா கணபதிகள்: 1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். 2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார். 3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார். 4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி. 5. செதலபதி ஆதி விநாயகர். 1 . பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார...