'கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும் தேவ ஸயனி' ஏகாதசி விரதம் ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 'ஆஷாத' (Ashadha) மாதம், ( June / July ) வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "ஸயன ஏகாதசி" (அ) "பத்ம ஏகாதசி" (அ) "தேவஸயனி ஏகாதசி" (அ) "ஆஷாத சுக்ல பட்ச ஏகாதசி" (Sayana Ekadasi / Padma Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது. ஸயன ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்: யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா, ஆஷாத மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். பகவான் ஸ்