Skip to main content

Posts

Showing posts from June, 2020

அனைவரின் 'பஞ்சம்' மற்றும் 'வறுமை' நீக்கும் ஸயன ஏகாதசி விரத மகிமை...

'கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும் தேவ ஸயனி' ஏகாதசி விரதம்  ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஆஷாத' (Ashadha) மாதம்,  ( June / July )  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "ஸயன ஏகாதசி" (அ) "பத்ம ஏகாதசி" (அ) "தேவஸயனி ஏகாதசி" (அ) "ஆஷாத சுக்ல பட்ச ஏகாதசி"  (Sayana  Ekadasi / Padma Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  ஸயன ஏகாதசி   பற்றி 'பவிஷ்ய உத்தர  புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா,   ஆஷாத  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அ...

குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை...

'கடும் நோய் தீர்க்கும் யோகினி ஏகாதசி' விரதம்  ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஆஷாத' (Ashadha) மாதம்,  ( June / July )  தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "யோகினி ஏகாதசி" (அ) ஆஷாத கிருஷ்ண பட்ச ஏகாதசி  (Yogini  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  யோகினி ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான்  ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்    கேட்கிறார்; பரம்பொருளே, ஓ மதுசூதனா, ஜேஷ்ட மாதத்தில் வரக்கூடிய 'நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை பற்றி எமது பாட்டனாரும், ரிஷிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ  வியாஸதேவரிடம்  கேட்டு அறிந்தோம். அதன் பிறகு, ஆஷாத  மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் ப...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ? சத்குரு கூறும் வழிமுறை என்ன ?  சத் குரு அவர்கள் உரையில் இருந்து... முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது , நோய் எதிர்ப்பு சக்தி என்பது நீங்கள் ஒரே நாளில் வளர்த்து விடக்கூடிய ஒன்று இல்லை . பொதுவாக , இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் , மருத்துவரீதியாகவும் இதைப் பற்றி நீங்கள் ஆய்வும் செய்யலாம் . என்னளவில் , நான் இப்படித்தான் பார்க்கிறேன் , நம்புகிறேன் . பல்வேறு காரணங்களை , மக்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது , உணவு வழக்கங்களை பார்க்கும்போது , உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடும்போது , தென்னிந்தியர்கள் மற்ற யாரை விடவும் இன்னும் சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறார்கள் ! உணவுப்  பழக்க வழக்கங்களாலும் , பயிற...

பிள்ளையார் தத்துவம் - தேங்காய் உடைப்பது - தோப்புக்கரணம் - பற்றி காஞ்சி மஹா பெரியவா விளக்கம்...

பிள்ளையார் தத்துவம்  - தேங்காய் உடைப்பது - தோப்புக்கரணம் - பற்றி காஞ்சி மஹா பெரியவா விளக்கம்... விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டி...