Skip to main content

நீங்கள் சாப்பிட வேண்டிய உணவின் அளவு பற்றி ஆயுர்வேதம் கூறுவது என்ன ?

உணவின் அளவு பற்றி ஆயுர்வேதம் கூறுவது என்ன ? 

அக்னி பகவானுக்கு "ஆச்ரயாசன்" என்று ஒரு பெயர் உண்டு. தான் பற்றிய பொருளை உணவாகக் கொள்பவன் என அதற்குப் பொருள். நன்றாக கொழுந்துவிட்டெரியும் அளவிற்கு வளர்ந்த பின்னரே அக்னி அவ்விதமான ஆற்றல் கொள்கிறது. அதன் ஜ்வாலையின் தீவிரம் குறைந்திருக்கும் சமயத்தில் அதிலிடும் பெரும்பொருட்கள் அதனை அணைத்து விடுகின்றன. ஈரப் பசையற்ற காற்றும் வரட்சியான கால நிலையும் அக்னிக்கு அனுகூலமாக இருப்பதனால் கொழுந்து விட்டு எரிகிறது.

இப்படி வெளியிலிருக்கும் அக்னியை நமது வயிற்றில் குடி கொண்டுள்ள "ஜாடராக்னி" எனும் பசித் தீயுடன் ஒப்பிடலாம். இந்தப் பசி எனும் அக்னியை கெடாமல் பார்த்துக் கொள்பவருக்குத்தான் ஆரோக்யம் எனும் சுகத்தை என்றென்றும் பெற இயலும். நாம் உண்ணும் உணவை இருவிதமாகப் பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை 'லகு' என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு செரிமானமாகும் உணவு வகைகளை 'குரு' என்றும் இருவகைகள். 

அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு, துவர்ப்பு மிகுந்த பொருட்களை எளிதில் ஜீர்ணமாக்கி விடுகிறோம். மாப்பண்டங்கள், இனிப்பு வகைகள் அனைத்தும் மெதுவாக ஜீர்ணமாகின்றன. இது இயற்கையான நியதி என்றிருந்தாலும் உணவை சமைப்பதன் மூலம் 'குரு'வான உணவை எளிதில் செரிமானமாக்கவும், 'லகுவான' உணவை குருவாக்கவும் செய்து விட முடிகிறது. கோதுமை சப்பாத்தியை நெருப்பில் இட்டு பாகப் படுத்துவதும், அரிசியை பொங்கலாக்குவதும் அதற்கு உதாரணங்கள். உடற்பயிற்சியின் மூலமாக உடல் பலமும், அக்னி பலமும் நன்றாக அமைந்தவர்களுக்கு எவ்வித உணவையும் எளிதில் ஜீரணித்து விடுகின்றனர்.
உடல் பலமும் அதற்கேற்ப அக்னி பலமும் பருவநிலைகளால் மாறுபடுகின்றன. குளிர் காலங்களில் உடலும், அக்னிபலமும் அதிகரித்திருக்கும். மழைக்காலம், கோடைக்காலம் இவைகளில் குறைந்தும், இளவேனிற் காலம், இலையுதிர் காலம் போன்ற பருவங்களில் நடுத்தரமாகவும் இருக்கும்.
கர்ப்பப்பையில் சினை முட்டையின் சேர்க்கை நிகழ்ந்ததும் குழந்தையின் வாத, பித்த, கப தோஷங்களின் சேர்க்கையின் அளவும், ஜீரண சக்தியின் பலமும் அந்த தோஷங்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன. தாயாரின் பாலை மட்டுமே அருந்தி வளரும் குழந்தை பெரிதானதும் அறுசுவை உணவையும் ஜீர்ணிப்பதை காண்கிறோம்.
குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் முடிய உள்ள வயது காரணமாகவும், வசிக்கும் இடம் காரணமாகவும், ஜீரண சக்தி வேறுபடுகிறது. கடற்கரை ஓரம், சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் சிறிதளவு உணவைக் கூட ஜீரணிக்க முடியாத சில உடல் நிலைகள், வறண்ட இடங்களில் வசிக்கும்போது எவ்வித உணவையும் ஜீரணிக்கும் தன்மையைப் பெறுகின்றன.
நமது புலன்களுக்குப் புலப்படாத இந்த அக்னியின் பலத்தை அவரவர்கள் தான் நன்கு உணர முடியும். எத்தகைய இலக்கிய விளக்கங்களும் இந்த  சூட்சமத்தை நன்கு விளக்காது. 

சர்க்கரையில் உள்ள இனிப்பு, அநுபவ வாயிலாகவே அறிய முடியும். எனவே அவரவர் தன் உடல் நிலையைத் தானாகவே நன்கு அறிந்து கொண்டு அக்னி பலத்தைத் தீர்மானித்து எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருள்களை திருப்தி ஏற்படும் வரையில் உண்ணலாம். அதிலும் அதிக திருப்தி ஏற்படும்வரை உட்கொள்ளுதல் கூடாது. 

தாமதித்து ஜீரணமாகும் உணவுப் பொருட்களை "மேலும் ஓர் பங்கு சாப்பிடலாம்" என்று தோன்றும் பொழுதே உண்பதை நிறுத்திவிட வேண்டும். அப்பொழுதுதான் அவை நன்கு ஜீரணம் அடையும். அவரவர் ஜீரண சக்திக்குத் தகுந்தவாறு உண்ண வேண்டும் என்று கூறியதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. 

தன் ஜீரண சக்தியை அறிந்து தன் இரைப்பை கொள்ளும் அளவை நான்கு சமபாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் இரண்டு பாகங்களை அன்னம், காய்கறிகள் போன்ற கனமான பொருள்களாலும், மற்றொரு பாகத்தை தண்ணீர் முதலிய திரவங்களாலும் நிரப்பி, எஞ்சியுள்ள மற்றொரு பாகத்தை காலியாகவே விட்டுவிட வேண்டும். இந்த அளவு முறையை அநுபவ வாயிலாக அறிய வேண்டும். வேறு எந்த வழியும் பூரணமான வழியாகாது. அவ்வப்போது அவரவர் தீர்மானிப்பதே சாலச் சிறந்தது.
இடைவெளியில்லாமல் வயிற்றின் முழுப் பகுதியையும் உணவால் நிரப்பினால் உணவு அசையக்கூட முடியாமல் தேங்கி ஜீரணமாகாமல் நிற்கும். ஆகவே தான் நான்கில் ஒரு பகுதியை காலியாக விட வேண்டும் என்ற உபதேசத்தை ஆயுர்வேதம் நமக்களிக்கிறது. 

அதிக அளவில் கனமான பொருளை சாப்பிட்டால் உணவு நெகிழ்ச்சி ஏற்படாமல் மந்தித்து நிற்கும். அதை தளர்வு செய்ய தண்ணீரை உணவின் இடையில் சிறிய அளவில் பருக வேண்டும். திரவமான உணவை அதிக அளவில் ஏற்றால் அது எளிதில் ஜீரணமாகி மறபடியும் பசியை எடுக்கச் செய்யும். அடிக்கடி உண்பது ஆரோக்யத்திற்கு ஏற்றதல்ல. திரவ உணவிற்கு சத்தும் குறைவு என்பதால் உடல் மெலிந்து விடும். தண்ணீரை உணவிற்கு முன்பும் உணவிற்குப் பின்னர் குடிப்பதும் தவறாகும். உணவிற்கு முன் குடித்தால் வயறு நிரம்பி விடும். கனமான பொருளை சரியான விகிதத்தில் உண்ண முடியாது. ஜீரணமாகாது. உணவிற்குப் பின் தண்ணீர் குடித்தால் கபநோய்கள் ஏற்பட்டு உடல் பருமன், ஜலதோஷம் போன்றவை ஏற்படலாம். ஆகவே பசியை நன்குணர்ந்து உணவை நாம் உண்ண வேண்டும்.

நன்றி : ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரேத் பேட்டை. 

ஓம் நம ஷிவாய... ஹரி ஓம் ...


உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

  1. A N Viswanatha RaoMay 27, 2020 at 6:53 AM

    Verily impressive and informative besides helpful

    ReplyDelete
  2. A N Viswanatha RaoMay 27, 2020 at 6:54 AM

    Very good and informative besides helpful too! Thanks 😊

    ReplyDelete

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் ...

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அ...

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: May...

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் ...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...