வெங்காயம், எலுமிச்சை, நாவற்பழம் ஆகிய மூன்றில் எது உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாயந்ததாக உள்ளது?
வெங்காயம் சுவையில் காரமானது. ஜீரணத்தின் இறுதியில் இனிப்பாக மாறக்கூடியது. சூடான வீர்யத்தைக் கொண்டது. பலம் தரும். காம இச்சையைத் தூண்டி விடுவது. இதனுடைய சூடான தன்மையினால் மாதாமாதம் தீட்டு சரிவராமல் இடுப்பு, தொடைகள் வலியுடன் கஷ்டப்படும் பெண்கள், தினம் காலையில் பல் துலக்கியவுடன் இரண்டு சிறிய வெங்காயத்தைத் தோல் நீக்கிச் சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, அதன் பின்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் நாளடைவில் வலிகள் நின்று தீட்டும் சரிவர வெளியாகும்.
எலுமிச்சம் பழம் குளிர்ச்சியானது என்று சிலர் கூறுவர். இது தவறானது. புளித்த பழச்சாறுகள் உடலின் தோலில் பட்டதும் சில்லென்ற உணர்ச்சி தரும் என்பது வாஸ்தவமே. "தலையில் சூடேறி விட்டது. எலுமிச்சம் பழத்தை வைத்துத் தேய்க்க வேண்டும்" என்று கூறுவர். தொடுகையில் முதல் உணர்ச்சிதான் குளிர்ச்சியாக இருக்குமே தவிர, அமிலமாகையால் தன் சூட்டைத் தொடர்ந்து காண்பிக்கும். எலுமிச்சம்பழம், எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதே ஆகும். நெல்லிக் கனி மற்றும் மாதுளம் கனியைத் தவிர எல்லாப் புளிப்புப் பழத் திரவங்களும் பித்தத்தை அதிகப்படுத்தி உடல் சூட்டை அதிகமாக்கும்.
நாவல் பழத்தை, பித்தக் கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், வறட்சி, எரிச்சல், தாகம், வெப்பம் போன்ற உடல்நிலைகளில் சாப்பிட்டால் அவை குறையும். ஆனால், பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் பசி கெட்டு, வயிற்றுப் பொருமல், குடல், கை, கால், கீல்களில் வலி முதலிய தொந்தரவு ஏற்படும். இவை நீங்க பச்சை நெல்லிக்காய் அல்லது நெல்லி வற்றலை மென்று தின்று குளிர்ந்த நீர் பருக வேண்டும்.
ஆகவே, வெங்காயம், எலுமிச்சை, நாவற்பழம் ஆகிய இம்மூன்றில் நாவல்பழம்தான் உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாய்ந்தது.
தகவல் உதவி: ஜெயேந்திரா ஆயுர்வேதிக் மருத்துவமனை & கல்லூரி
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment