Skip to main content

Posts

Showing posts from May, 2020

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...

நீங்கள் சாப்பிட வேண்டிய உணவின் அளவு பற்றி ஆயுர்வேதம் கூறுவது என்ன ?

உணவின் அளவு பற்றி ஆயுர்வேதம் கூறுவது என்ன ?  அக்னி பகவானுக்கு "ஆச்ரயாசன்" என்று ஒரு பெயர் உண்டு. தான் பற்றிய பொருளை உணவாகக் கொள்பவன் என அதற்குப் பொருள். நன்றாக கொழுந்துவிட்டெரியும் அளவிற்கு வளர்ந்த பின்னரே அக்னி அவ்விதமான ஆற்றல் கொள்கிறது. அதன் ஜ்வாலையின் தீவிரம் குறைந்திருக்கும் சமயத்தில் அதிலிடும் பெரும்பொருட்கள் அதனை அணைத்து விடுகின்றன. ஈரப் பசையற்ற காற்றும் வரட்சியான கால நிலையும் அக்னிக்கு அனுகூலமாக இருப்பதனால் கொழுந்து விட்டு எரிகிறது. இப்படி வெளியிலிருக்கும் அக்னியை நமது வயிற்றில் குடி கொண்டுள்ள "ஜாடராக்னி" எனும் பசித் தீயுடன் ஒப்பிடலாம். இந்தப் பசி எனும் அக்னியை கெடாமல் பார்த்துக் கொள்பவருக்குத்தான் ஆரோக்யம் எனும் சுகத்தை என்றென்றும் பெற இயலும். நாம் உண்ணும் உணவை இருவிதமாகப் பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை 'லகு' என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு செரிமானமாகும் உணவு வகைகளை 'குரு' என்றும் இருவகைகள்.  அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு, துவர்ப்பு மிகுந்த பொருட்களை எளிதில் ஜீர்ணமாக்கி விடுகிறோம். ...

உலகம் முழுக்க புகழைத்தரும் 'அபரா ஏகாதசி' விரத மகிமை ...

'அபரா ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   தேய்   பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "அபரா  ஏகாதசி"  (Apara Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  அபரா ஏகாதசி பற்றி 'பிரம்மாண்ட  புராண' விளக்கம்:  யுதிஷ்டிர மஹராஜ்  ஸ்ரீ கிருஷ்ணரிடம்,   கேட்கிறார்... ஓ பரந்தாமா, வாசுதேவா,  ஜேஷ்ட  மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன, அதனை உங்கள் மூலம் கேட்க விரும்புகிறோம் என்று கேட்கிறார்.  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ தர்ம புத்திரனே,  ஜேஷ்ட மாத தேய் பிறையில்  வரும் ஏகாதசி 'அபரா ஏகாதசி' என்று அழைக்கப்படும். உலக மக்களின்  நன்மைக்காக நீ...

உடல் சூடு குறைய - ஆயுர்வேதம் கூறும் எளிய வழி என்ன ?

வெங்காயம், எலுமிச்சை, நாவற்பழம் ஆகிய மூன்றில் எது உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாயந்ததாக உள்ளது? வெங்காயம் சுவையில் காரமானது. ஜீரணத்தின் இறுதியில் இனிப்பாக மாறக்கூடியது. சூடான வீர்யத்தைக் கொண்டது. பலம் தரும். காம இச்சையைத் தூண்டி விடுவது. இதனுடைய சூடான தன்மையினால் மாதாமாதம் தீட்டு சரிவராமல் இடுப்பு, தொடைகள் வலியுடன் கஷ்டப்படும் பெண்கள், தினம் காலையில் பல் துலக்கியவுடன் இரண்டு  சிறிய வெங்காயத்தைத் தோல் நீக்கிச் சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, அதன் பின்பு  குளிர்ந்த தண்ணீர் குடித்தால் நாளடைவில் வலிகள் நின்று தீட்டும் சரிவர வெளியாகும். எலுமிச்சம் பழம் குளிர்ச்சியானது என்று சிலர் கூறுவர். இது தவறானது. புளித்த பழச்சாறுகள் உடலின் தோலில் பட்டதும் சில்லென்ற உணர்ச்சி தரும் என்பது வாஸ்தவமே. "தலையில் சூடேறி விட்டது. எலுமிச்சம் பழத்தை வைத்துத் தேய்க்க வேண்டும்" என்று கூறுவர். தொடுகையில் முதல் உணர்ச்சிதான் குளிர்ச்சியாக இருக்குமே தவிர, அமிலமாகையால் தன் சூட்டைத் தொடர்ந்து காண்பிக்கும். எலுமிச்சம்பழம், எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதே ஆகும். நெல்லிக் கனி மற்றும் மாது...

மலையளவு பாவத்தையும் போக்கும் 'மோஹினி ஏகாதசி' விரத மகிமை ...

'மோஹினி ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'வைஷாக மாதம்',  ( April / May  )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "மோஹினி    ஏகாதசி"  (Mohini  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  மோஹினி ஏகாதசி பற்றி 'கூர்ம  புராண' விளக்கம்:  யுதிஷ்டிர மஹராஜ்  ஸ்ரீ கிருஷ்ணரிடம்,  கேட்கிறார்... ஓ வாசுதேவா,  வைஷாக   மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார்.  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ தர்ம புத்திரனே,  வைஷாக மாத வளர் பிறையில்  வரும் ஏகாதசி 'மோஹினி ஏகாதசி' என்று அழைக்கப்படும். வசிஷ்ட மகரிஷி, ராம பிரானுக்கு உரைத்தத...