ஆலயமும், ஆஸ்பத்திரியும்... மஹா பெரியவா பார்வையில்... எப்பொழுதும் ஏதாவது ஒரு வினாவிற்கு விடை தேடும் பொழுது, முதலில் காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து தேடுவது தான் இந்த சிறியவனின் வழக்கம். தற்பொழுது கூட பல்வேறு புத்திசாலித்தனமான விளக்கங்கள் ஆலயத்தைப் பற்றியும், ஆஸ்பத்திரி பற்றி யும் வருவதைப் பார்க்க முடிந்தது. ஆலயத்தேவை மற்றும் ஆஸ்பத்திரி தேவை பற்றி அற்புதமான விளக்கத்தை 'தெய்வத்தின் குரலி ல்' இருந்து இங்கு பதிவிடுகிறோம். ஆலயமும், ஆஸ்பத்திரியும்: "மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம்" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்கள் வேண்டியதில்லை என்றும், அவற்றை வைத்தியசாலைகளாகவும் பள்ளிக்கூடங்களாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு ஆறுதல் தருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வியறிவு தருவது எல்லாம் பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாக ப்ரீதி அடைகிறான் என்பதும் ரொம்ப உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது மனித சேவ...