(கிருமிக்கான) தீர்வு உங்கள் (நமது) கைகளில்...
இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? சாஸ்திர பூர்வமாக மற்றும் அறிவியல் பூர்வமாக...?
ஒரு துளி ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் நமஸ்காரம்.
இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? சாஸ்திர பூர்வமாக மற்றும் அறிவியல் பூர்வமாக...?
ஒரு துளி ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் நமஸ்காரம்.
இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் Corona பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நமது இந்தியா உள்பட...
இது, சீனாவில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று ஒரு கருத்து / சீனா ஒரு Bio War புரிவதற்காக அந்த நாடே தயாரித்த China Virus என்று ஒரு கருத்து.
எது எப்படியோ ? இப்பொழுது நாம் அனைவரும் (உலக மக்கள்) பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்.
இந்த நேரத்தில், இந்த 'சிறியவனின்' மனதில் தோன்றிய ஒரு சில கருத்துக்கள்.
இப்பொழுது, இது தோன்றிய விதத்தை ஆராய்ச்சி செய்வதை காட்டிலும், நமது நாட்டில் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே சாலச்சிறந்தது.
ஒரு வகையில் பார்த்தால், இதனையே "கர்மா" எனலாம். மற்ற நாடுகளை விட்டு விடுவோம், இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் 25-03-2020 முதல் 14-04-2020 வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இன்றைய, பரபரப்பான சூழலில், (எதற்கு இந்த பரபரப்பு என்று யோசிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு?!) சமீப காலங்களில் நம்மில் 95% பேர் வீட்டில் முழுதாக ஒரு நாள் கூட அவரவர் குடும்பத்துடன் பொறுமையாக செலவழித்து இருக்க மாட்டோம்.
ஆனால், இப்பொழுது முழுதாக 21 நாட்கள் கட்டாயமாக வீட்டில் இருக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறோம். இதற்கு பெயர் தான் கர்மா.
நாம், சனாதன தர்மத்தின் படி, முற்காலங்களில், தெளிவாக எதனையெல்லாம் வாழ்வியல் நடைமுறைகளாக பின்பற்றி வந்தோமோ, (வெளியில் சென்று வந்தால் கை, கால் அலம்புவது, ஒருவர் குடித்த பாத்திரத்தில் மற்றொருவர் நீர் அருந்தாமல் இருந்தது, அவரவர் தனக்கென ஒரு பாத்திரம் உபயோகித்து, தள்ளி நின்று தொட்டு விடாமல் பேசுவது, இன்னும் பல...) அதனை சாஸ்திரம், உயர்ஜாதி கலாச்சாரம், தீண்டாமை, பார்ப்பான் பிரிவினை இன்னும் வேறு என்னென்ன பெயர்களில் சொல்லி நம்மில் இருந்து பிரித்து எடுக்க முடியுமோ அதனை மிகவும் சிறப்பாக செய்து முடித்து விட்டார்கள் கடந்த 300 ஆண்டுகளில்.
ஆனால், இப்பொழுது அதே நடைமுறையை மீண்டும் உலகம் முழுக்க, அனைவரும் வலுக்கட்டாயமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு பெயர் தான் கர்மா.
பெருகி வரும் மக்கள் ஜனத்தொகை குறைக்கப்பட வேண்டிய ஒன்று என்று பல ஆன்மீக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், நாம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை... இப்பொழுது இயற்கை அந்த வேலையை செய்கிறது. இதற்கு பெயர் தான் கர்மா.
இந்த பிரபஞ்சத்தில், ஒரு நபர் எதனை பற்றி அதிகம் பேசுகின்றாரோ, சிந்திக்கின்றாரோ அதுவே அவருக்கு கிடைக்கும். (அவரது எண்ணத்தின் வலிமையை பொறுத்து எவ்வளவு விரைவாக அல்லது மெதுவாக என்பது தீர்மானிக்கப்படும்)
மற்றும் ஒரு முக்கியமான விஷயம், நேர்மறை எண்ணங்கள் கூட செயல்பட சிறிது கால அவகாசம் எடுக்கும், ஆனால் எதிர்மறை எண்ணங்கள் உடனே செயல்படும். அதனால் தான், நமது முன்னோர்கள் சாஸ்திரங்களில் கூறிய படி, எப்பொழுதும் நேர்மறை எண்ண வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்க சொன்னார்கள்.
(ஒரு சிறிய உதாரணம்)...இன்றும் கூட, நாம் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் பொழுது , ஒற்றை வார்த்தையில் "போறேன்" என்று பதில் சொல்வதை வீட்டிலுள்ள பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள். "போயிட்டு வரேன்" என்று சொல்ல சொல்வார்கள்.

சரி, இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன?
நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்-ஸ்வாமி விவேகானந்தர்.
1. முதலில் இதன் பெயரை அடிக்கடி உச்சரிப்பதை நிறுத்துவோம்.
2. அடுத்து, தற்போதைய சமூக வலைதளங்களில், நான் தான் முதலில் இந்த தகவலை தெரிவித்தேன் / புள்ளிவரத்தை தெரிவித்தேன் அல்லது Forward செய்தேன் என்ற பெருமை (?!?) கிடைப்பதற்காக இது சம்பந்தப்பட்ட தகவல்களை ஒவ்வொருவரும் மீண்டும், மீண்டும் வாரி வழங்குவதை நிறுத்துவோம்.
3. கண்டிப்பாக இது ஒரு முன்னெச்சரிக்கை தகவல் (அ) பாதுகாப்புக்கு ஏற்ற தகவல் (அ) குணமாக்கும் தகவல் என்றால் அந்த தகவலை மட்டும் பகிர்வோம்.
4. இது சம்பந்தப்பட்ட நகைச்சுவையை வரவழைக்கும் ஒரு Memes தான், அதனால் தான் அனுப்பினேன் என்று கூறுவதை நிறுத்துவோம். அதனைக்கூட தவிர்ப்போம்.
5. தற்பொழுது எந்த ஒரு செய்தி ஊடகங்களிலும் இதனை பற்றிய செய்திகள் தவிர வேறு செய்திகள் கிடையாது. செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டியது தான், ஆனால் 24 மணி நேரமும் அனைத்து செய்தி சேனல்களையும் மாற்றி, மாற்றி பார்த்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்பு ஒரே ஒரு செய்தி சேனல் இருந்ததை நினைவில் கொள்வோம். காலை, மதியம் மற்றும் மாலை ஒரு 20 நிமிடங்கள் மட்டும் செய்திகளை பார்ப்போம். கண்டிப்பாக நீங்கள் உறங்க செல்வதற்கு ஒரு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே செய்திகளை பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். இதனை செய்தாலே நமக்கு பாதி தீர்வு கிட்டியது மாதிரி தான்.

6. அடுத்து, நேர்மறை எண்ண அலைகளை நாம் இருக்கும் இடங்களில் அதிகரிக்க செய்ய வேண்டும். அதனை எளிதாக எவ்வாறு செய்வது ? "மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை" காலை மற்றும் மாலை வேளைகளில் குறைந்தது 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒலிக்க செய்யுங்கள். ஓரளவு குறைந்த ஒலியில் (ஒரு நபருக்காவது கேட்கும் அளவு) எங்கள் இல்லத்தில் / இருக்கும் இடத்தில் என்னால் முழு நேரமும் ஒலிக்கச் செய்ய முடியும் என்று நீங்கள் கூறினால், நீங்கள் தான் பாக்கியவான். முதலில் அதனை செய்யுங்கள்.
7. வாய்ப்பு இருப்பவர்கள், (ஏற்கனவே தெரிந்தவர்கள்) உங்கள் இல்லங்களில் Positive Vibration ஐ அதிகரிக்க செய்ய "நித்ய அக்னி ஹோத்ரா" (ஹோமம்) செய்யலாம். இதனை அந்தணர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வட இந்தியாவில் பெரும்பாலான இல்லங்களில் இது ஒரு தினசரி கடமை ஆகும். டெல்லியில் 1984-இல் போபால் விஷ வாயு தாக்கத்தின் போது 5,00,000-ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 2,200க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்த சூழ்நிலையில், அந்த நேரத்தில் "அக்னி ஹோத்ரா" செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் எந்த பாதிப்பும் இன்றி விஷ வாயு தாக்குதலில் இருந்து தப்பியது நினைவில் இருக்கலாம்.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்
||
Auṃ
tryambakaṃ yajāmahe
sugandhiṃ
puṣṭivardhanam।
urvārukamiva
bandhanān
mṛtyormukṣīya
māmṛtāt ॥
7. வாய்ப்பு இருப்பவர்கள், (ஏற்கனவே தெரிந்தவர்கள்) உங்கள் இல்லங்களில் Positive Vibration ஐ அதிகரிக்க செய்ய "நித்ய அக்னி ஹோத்ரா" (ஹோமம்) செய்யலாம். இதனை அந்தணர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வட இந்தியாவில் பெரும்பாலான இல்லங்களில் இது ஒரு தினசரி கடமை ஆகும். டெல்லியில் 1984-இல் போபால் விஷ வாயு தாக்கத்தின் போது 5,00,000-ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 2,200க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்த சூழ்நிலையில், அந்த நேரத்தில் "அக்னி ஹோத்ரா" செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் எந்த பாதிப்பும் இன்றி விஷ வாயு தாக்குதலில் இருந்து தப்பியது நினைவில் இருக்கலாம்.
8. நாம் இருக்கும் இடங்களில் இருந்தே, தினசரி காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் 108 முறை தன்வந்திரி காயத்ரி மந்திரத்தை சொல்வோம். ஒரு குறிப்பிட்ட நேரம் என எடுத்துக்கொண்டால், காலை 10 மணி மற்றும் மாலை 06:30 மணி என கணக்கு வைத்துக்கொள்வோம். வீட்டில் இருக்கும் அனைவரும் சொல்லலாம்.
ஓம் ஆதிவைத்யாய வித்மஹே |
ஆரோக்ய அநுக்ரஹாய தீமஹி
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத் ||
9. அடுத்து, தினமும், கீழ்கண்ட பிரார்த்தனையை காலை எழுந்தவுடனும் மற்றும் இரவு உறங்க செல்லும் முன்பும் அனைவரும் மனதார சொல்வோம்.
கண்ணை மூடி, உங்களது இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் நினைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு கீழ்வரும் வாக்கியத்தை அப்படியே கூறுங்கள்... ஒவ்வொரு வாக்கியம் கூறும் பொழுதும் அதில் சம்பந்தப்பட்டவர்களை மனக்கண்ணில் நினைத்துக்கொள்ளுங்கள்...
நானும், எனது குடும்பத்தார் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளோம். (3 முறை)
எனது தெருவில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள். (3 முறை)
எனது மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள். (3 முறை)
எனது மாநிலத்தில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள். (3 முறை)
எனது நாட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள். (3 முறை)
இதற்காக வெளியில் உழைத்து கொண்டிருக்கும், பிரதமர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்...(3 முறை)
சர்வே ஜனா சுகினோ பவந்து ...
10. எல்லாவற்றிற்கும் மேலாக, விரதங்களில் மிக சிறந்ததாக கருதப்படும் 'ஏகாதசி விரதம்' ஒரே ஒரு முறை மட்டுமாவது இருந்து அதன் பலனை உலக நலனுக்காக / இந்தியாவின் நலனுக்காக தானமாக அளிக்கலாம். ஆம், வரும் 04-04-2020 சனிக்கிழமை அன்று உடல்நிலை ஒத்துழைக்கும் அனைவரும் ஒரு முழு நாள் உண்ணாமல் விரதம் இருக்கலாம் அல்லது அவரவர் உடல்நிலைக்கேற்ப காலை மற்றும் மதியம் இரு வேளை மட்டும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். அன்று பகவான் சிந்தனையுடன் இருப்போம். முதியவர்கள், நீரழிவு நோயாளிகள் மற்றும் உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் உபவாசம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால், அன்று முழுவதும் "மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தையும்", "தன்வந்திரி பகவான் காயத்ரி மந்திரத்தையும்" ஜபித்துக் கொண்டிருத்தல் நலம். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். உங்கள் மூலம் ஒரே ஒரு நபர் அன்று உபவாசம் இருந்தாலும் அது உலகிற்கே நன்மை தான்.
#FastingOn4thApril2020
#Fasting4Country4thApril
இவ்வாறு, மேற்கூறிய ஒரு சில விஷயங்களை நாம் அனைவரும் முடிந்த வரையில் கடைபிடிப்போம்.
விரைவில் நமது நாடு இந்த சூழலில் இருந்து மீண்டு வர, நாட்டு மக்கள் அனைவரும் பூரண நலன் பெற உடலால் தனித்திருந்து, மனதால் இணைந்திருந்து ஒரே நேரத்தில் ப்ரார்த்தனை செய்வோம்.
ஓம் நம ஷிவாய... ஹரி ஓம்...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,

அதற்கு அடுத்த நாள், (05-04-2020) அன்று காலையில் குளித்த பின்பு, காலை உணவுக்கு முன்பாக, உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் ஒரு நிமிடம் தியானித்து, கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் வலது கையில் கொஞ்சம் நீர் எடுத்து (உங்கள் கையில் நீர் நிற்கும் அளவு போதுமானது) மனதார வேண்டி, "நேற்று நான் இருந்த விரதத்தின் பலனை, பாரத தேசத்தில் இருக்கும் அனைவரது உடல் நலத்திற்காகவும் தானம் செய்கிறேன். விரைவில் இந்த நிலை மாறி இயல்பான நிலை வர வேண்டுகிறேன்" என்று கூறி வேண்டிக்கொண்டு அந்த நீரை ஒரு தட்டில் விட்டு, அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நீரை செடிகளில் விட்டு விடலாம். (அல்லது, கால் மிதி படாமல் வெயில் அடிக்கும் இடங்களில் கூட விட்டு விடலாம். [மொட்டை மாடி , ஜன்னல் etc,etc ...])
அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டு இவ்வாறு செய்வதற்கு அபரிமிதமான பலன்கள் அனைவருக்கும் உண்டு. கண்டிப்பாக, நிச்சயமாக விரைவில் அனைத்தும் நல்ல படியாக நடக்கும். இது, பல்வேறு சூழ்நிலைகளில் எமது தனிப்பட்ட அனுபவத்தில் கண்ட உண்மை.
விரைவில் நமது நாடு இந்த சூழலில் இருந்து மீண்டு வர, நாட்டு மக்கள் அனைவரும் பூரண நலன் பெற உடலால் தனித்திருந்து, மனதால் இணைந்திருந்து ஒரே நேரத்தில் ப்ரார்த்தனை செய்வோம்.
ஓம் நம ஷிவாய... ஹரி ஓம்...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
அன்பர் அவர்களுக்கு வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் ஆன்மீகத்தையும் ஐய்தீகத்தையும் நம்புகின்றவர்களுக்கு அற்புதமான விசயம் ஒரு துளி உண்மை துளி என்றும் அன்புடன் ரிப்போர்ட்டர் மாரிமுத்து நீதிராஜா கரூர்
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா ...
ReplyDeleteSure sir. Every real indians should follow must
ReplyDeleteThank you so much Sir...
Delete