(கிருமிக்கான) தீர்வு உங்கள் (நமது) கைகளில்... இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? சாஸ்திர பூர்வமாக மற்றும் அறிவியல் பூர்வமாக...? ஒரு துளி ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் Corona பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நமது இந்தியா உள்பட... இது, சீனாவில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று ஒரு கருத்து / சீனா ஒரு Bio War புரிவதற்காக அந்த நாடே தயாரித்த China Virus என்று ஒரு கருத்து. எது எப்படியோ ? இப்பொழுது நாம் அனைவரும் (உலக மக்கள்) பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இந்த நேரத்தில், இந்த 'சிறியவனின்' மனதில் தோன்றிய ஒரு சில கருத்துக்கள். இப்பொழுது, இது தோன்றிய விதத்தை ஆராய்ச்சி செய்வதை காட்டிலும், நமது நாட்டில் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே சாலச்சிறந்தது. ஒரு வகையில் பார்த்தால், இதனையே "கர்மா" எனலாம். மற்ற நாடுகளை விட்டு விடுவோம், இந்த நோயின் பரவலை கட...