வைகுண்ட ஏகாதசி...
வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் ...
நாம் பொதுவாகவே மாதந்தோறும் வரும் 2 ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும்.. இது நமது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து அதனை பலப்படுத்துவதற்காகவும் நமது எண்ணம் (சிந்தனா சக்தி) உயர்வாக மாறவும் செய்யப்பட்ட ஏற்பாடு...
ஆனால், தற்போதைய "நவீன" (??!!) காலத்தில் அவ்வாறு மாதம் தோறும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் 'வைகுண்ட ஏகாதசி' ஒரு தினம் மாத்திரம் உபவாசம் இருப்பின் மிக, மிக நன்று... ஒரு வருடம் உபவாசம் இருந்த பலன் கிடைக்கும். உபவாசம் இருந்து மனதை விழிப்பு நிலையில் நிறுத்தி உங்களது நியாயமான கோரிக்கைகளை /ப்ரார்த்தனைகளை பெருமாளிடம் கேளுங்கள், நிச்சயம் வேண்டுதல் கைகூடும்...
ஏகாதசி விரத மகிமை பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளது... நமது, இணைய தளத்தில் ஒவ்வொரு மாத ஏகாதசி பற்றியும் அதற்குரிய புராண விளக்கங்களையும், புராண பெயர்களோடு விரிவாக எழுதி வருகின்றோம்...
புராண விளக்கம்:
'கலி யுகம்' தொடங்கிய பிறகு முதன் முதலில் பகவான் விஷ்ணுவின் பரமபதமான 'வைகுண்டம்' சென்றவர் யார் ?
'கலியுகத்தில்', தனது பக்தனுக்கு பெருமாள் நேரில் தோன்றி பூலோகத்தில் காட்சி கொடுத்தாரா ? அப்படியெனில் அது எந்த ஊர் , எந்த மாநிலம் ?
'கலியுகத்தில்' முதன்முதலாக வைகுண்டம் சென்ற அந்த மஹா புண்ணிய ஆத்மா பிறந்தது எந்த குலத்தில் ? (Caste / Community)
இன்றும் அந்த ஊர் (அ) இடம், நாம் செல்லும் நிலையில் இருக்கின்றதா ?
இதற்கெல்லாம் ஏதாவது ஆதாரம் உண்டா ?
ஆம், கண்டிப்பாக ஆதாரம் உண்டு...
'வைகுண்ட ஏகாதசி' என பெயர் வரக்காரணமும், 5100 ஆண்டுகள் பழமையான, அருமையான ஒரு கோவில் 'ஸ்தலபுராணமும்' இணைந்து தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு நமது 'ஒரு துளி ஆன்மீகம்' குழுவினருக்காக இதோ காணொளி வடிவில்...
விரத முறை பற்றி கீழே கொடுத்துள்ள தகவல்களை முழுவதும் படித்து விட்டு அதன் பின்பு காணொளியை காணும் படி கேட்டுக்கொள்கிறோம்...
காணொளி காண இங்கு கிளிக் செய்யவும்...
காணொளி காண இங்கு கிளிக் செய்யவும்...
விரத முறை:
ஏகாதசி முதல் நாள் (தசமி திதி) அன்று இரவே, நாம் அன்ன உணவை தவிர்க்க வேண்டும்...
(பூரி, சப்பாத்தி, அவல் உப்புமா, ரவை உப்புமா போன்றவை சாப்பிடலாம்..)
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்துவிட்டு, காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேளைகளிலும் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்...அன்று பகலில் உறங்கக்கூடாது.
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு காலையில் ஒருமுறையும், பின்னர் மாலை சொர்க்க வாசல் திறந்த பின்னர் ஒரு முறையும் சென்று பெருமாளை மனமுருக வேண்டி 'கோவிந்த நாம ஸ்மரணம்' செய்வது மஹா புண்யமாகும்...(ஸ்ரீரங்கம் போன்ற சில ஸ்தலங்களில் அதிகாலையிலேயே (04:00 மணிக்கு) 'பரம பத வாசல்' திறக்கப்பட்டு விடும்...)
பின்னர், ஏகாதசி அன்று முழு இரவும், உறங்காமல் இருந்து கோவிந்த நாம சங்கீர்த்தனம், பஜனை, பாடல்கள் பாடியும் பகவான் நினைவாக இருத்தலும் மிக முக்கியம்... திவ்ய தேசங்களிலும் மற்றும் பல முக்கிய ஷேத்திரங்களிலும் இரவு முழுவதும் பூஜைகள், பஜனைகள், உபன்யாஸம் நடைபெறும். அதில் கலந்துகொண்டு விழிப்பு நிலையில் (தியான நிலை) இருக்க முயற்சிக்கலாம்.

பின்னர், மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் குளித்து, மீண்டும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் வாங்கி அருந்த வேண்டும். (ஒருவேளை கோவிலில் இருந்து வெகு தொலைவில் உங்களது இல்லம் இருந்தாலோ அல்லது துவாதசி அன்று காலையில் கோவில் செல்ல முடியாது என்ற நிலையில் இருந்தாலோ ஏகாதசி அன்று கோவிலுக்கு செல்லும் பொழுதே அன்று கொடுக்கும் 'தீர்த்தத்தை' ஒரு சிறிய கிண்ணத்தில் வாங்கி வைத்துக்கொள்ளலாம்...)
அதன் பின்னர் இல்லத்தில் அன்னம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியலுடன் அவரவருக்கு ஏற்றவாறு மிக நல்ல சாப்பாடு 'தானியங்களுடன் சேர்த்து' சாப்பிட்டு உபவாசம் நிறைவு செய்யலாம்... அகத்தி கீரை மற்றும் நெல்லிக்கனி சேர்த்துக்கொள்வது மிக நன்று...(அவசியமும் கூட...) நாம் சாப்பிடும் முன்பு யாராவது ஒரு அந்தணருக்கோ அல்லது உணவு தேவை உள்ள ஒரு நபருக்கோ உணவளித்து விட்டு நாம் சாப்பிடுவது நமது புண்ணியத்தை பல மடங்கு அதிகரிக்கும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறையினை வைத்து அதனை நான்கு விதமாக பிரிக்கலாம்...
1. நிர்ஜல உபவாசம்...(நாள் முழுவதும், தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பது...)
2. ஜல உபவாசம்...(தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் மட்டும் அருந்திக்கொண்டு விரதம் இருப்பது...)
3.பழச்சாறு மற்றும் பழங்கள் உபவாசம்...(பழங்களை அப்படியே எடுத்துக்கொள்வது / பழச்சாறு செய்து எடுத்துக்கொளவது...{முக்கிய குறிப்பு...பழச்சாறில் பால் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்...}
4. நிலக்கடலை மற்றும் பழம் உபவாசம்...
(முதலில் இந்த 'வைகுண்ட ஏகாதசி' பதிவினை முழுவதும் படித்துக்கொள்ளவும் அதன் பின்பு..... நிலக்கடலையுடன் பழம் சேர்த்து எப்படி மிக எளிதாக நமது பசியை போக்கி கொள்ளலாம் என்றும், நமது உடல்நலத்தை எவ்வாறு எளிதாக கையாளலாம் என்றும் அறிய நமது முந்தைய 'நிலக்கடலை ரகசியங்கள்' பதிவினை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...)

நம்மில் சிலருக்கு பசும் பால் இயற்கையாக கிடைக்கும் பொருள் தானே? அதனை ஏன் சேர்க்கக்கூடாது என்று ஒரு கேள்வி எழுவது நியாயம் தான் ?
பொதுவாகவே, ஏகாதசி அன்று எந்த ஒரு தானிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது தான். எள் மற்றும் நல்லெண்ணெயும் இதில் அடக்கம் தான். ஒரு சில பால் பண்ணைகளில், பால் கறப்பதற்காக பசு மாட்டின் மடுவில் சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு அதன் பின்பு பால் கறக்க ஆரம்பிப்பார்கள்.
விரதத்தை மிகவும் நேர்த்தியாகவும் / முழுமையாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த தகவலை இங்கு கூறுகிறோம்.
இதில் மேற்கண்ட 4 முறைகளில் ஏதாவது ஒரு முறையில் விரதம் இருப்பவர்கள், ஏகாதசி அன்று கோவில் சென்று பெருமாள் தரிசனம் செய்யும் பொழுது கொடுக்கப்படும் 'துளசி தீர்த்தம்' மற்றும் 'ரவா கேசரி' (அ) 'அவல் கேசரி' போன்ற எந்த ஒரு பகவான் பிரசாதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்த நாள் எடுத்துக் கொள்ளலாமே தவிர 'வைகுண்ட ஏகாதசி' அன்று தவிர்ப்பது நல்லது... (பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் 'வைகுண்ட ஏகாதசி' அன்று அவல் கேசரி தான் கொடுக்கப்படும், ஆனால், அதனை உபவாஸம் இருக்கும் பக்தர்கள் அனைவரும் வாங்கிக் கொள்வார்களே தவிர அன்று உண்ண மாட்டார்கள், அடுத்த நாள் விரதம் பூர்த்தி செய்யும் பொழுது தான் எடுத்துக்கொள்வார்கள்...)
அதெல்லாம் சரி,
5-வது Option என்ன என்று சில பேர் கேட்பது நம் காதில் விழுகிறது...(!?)
சாஸ்திரத்தில், அப்படி ஒரு Option இல்லை என்ற பொழுதிலும், 'கலியுகம்' இப்படித்தான் இருக்கும் என்ற புரிதல் காரணமாக நாம் சொல்வது இதோ உங்களுக்காக ...
...முழுதாக விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் ???...விதி விலக்கு...
தாங்கள் புரியும் பணி காரணமாகவும், உடல் உழைப்பை அதிகம் புரிந்து வேலை செய்பவர்களும் மூன்று வேளைகளும் உபவாசம் இருக்க முடியாதவர்களும் (வயோதிகர்கள், உடல் நலம் குன்றியவர்கள், விரதமே இருந்து பழக்கப்படாதவர்கள், உடல் உறுதி, மன உறுதி குறைவாக உள்ளவர்கள், இரத்தக்கொதிப்பு {Blood Pressure} மற்றும் சர்க்கரை வியாதி {Diabetes } உடையவர்கள்....) ஆகியோர்களுக்காக...
வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் மட்டுமாவது, அரிசி உணவு (Rice), வெள்ளை சர்க்கரை (White Sugar) மாத்திரம் கண்டிப்பாக தவிர்த்து, {இயற்கை முறையில் தயாரிக்கும் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் பயன் படுத்தி கொள்ளலாம்} அவல் உப்புமா, ரவை உப்புமா போன்ற ஸாத்வீக உணவுகளை அவரவர் உடல் நலத்திற்கேற்ப அவர்களது தேவைக்கேற்ப (ஒரு வேளையோ / இரு வேளையோ / மூன்று வேளைகளுமோ) எடுத்துக் கொண்டு நாள் முழுவதும் கோவிந்த நாமத்தை மனதிற்குள்ளாகவே ஜபம் செய்யலாம்...
மேற்கூறிய விரத முறைகளில், அவரவர் தங்களது உடல் நிலையை பொறுத்தும், அன்றைய பணி சூழ்நிலை பொறுத்தும் தாங்களே முடிவு செய்து கொள்ளுமாறு 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' இந்த 'ஒரு துளி ஆன்மீகம்' இணைய தளம் (www.OruThuliAanmeegam.in) வழியாக தாழ்மையாக தெரிவித்துக் கொள்கின்றது ....

இந்த விரத முறை அனைத்தும் அறிவியல் பூர்வமாக நமது உடலுக்கு மிக நன்மை பயக்கும் விஷயம் என்றும், கேன்சர் செல்களை வளர விடாமல் தடுக்கும் என்றும் தற்பொழுது நவீன அறிவியல் காலத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்...
முடிந்தவரை, 'வைகுண்ட ஏகாதசி' ஒருநாள் மாத்திரம் அன்னம் மற்றும் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்போம்... ஒரு வருட உபவாச பலனை பெறுவோம்...
...ஹரி ஓம்...
...ஓம் நமோ நாராயணாய...
...ஸ்ரீ வெங்கடேசாய நமஹ...
...ஸ்ரீ கோவிந்தாய நமஹ...
...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
...நன்றி ...
...நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Good service
ReplyDeleteThank you. Namaskar.
Delete