Skip to main content

Posts

Showing posts from January, 2020

திருமண மந்திரங்கள்-உண்மையான சாஸ்திர அர்த்தம் என்ன?

திருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தம் என்ன ? சாஸ்திரங்கள் கூறும் உண்மையான அர்த்தம் பற்றி ' மகாமகோபாத்யாய' "ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்" விளக்கம்  ? நன்றி: சக்தி விகடன் தி ருமண மந்திரங்கள் அபத்தமானவையா ? ? இல்லவே இல்லை... அவை மிகப் புனிதமானவை; ஆழமான அர்த்தம் பொதிந்தவை.  இது குறித்து 'மகாமகோபாத்யாய' ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகள், 2005- ம்  ஆண்டு  "சக்தி விகடனில்" எழுதிய விரிவான கட்டுரையை, இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்’ என்று ஒரு பழமொழி. இதற்கு ஏதேதோ அர்த்தங்கள் சொல்கிறார்கள். ஆனால், கல்யாணத்தின்போது இதற்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருளே வேறு. மணப்பெண் - மணமகள் இருவருமாகச் சேர்ந்து அக்னி பகவானிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டுவது பதினாறு விஷயங்களை. அவற்றை அக்னி பகவான் அருள, இவர்கள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள். சரி, அந்தப் பதினாறு வேண்டுதல்கள் என்னென்ன? பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் வரை யிலும் உள்ள கால இடைவெளியை மூன்று பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரி

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்ர ஸத நாமாவளி ...(தமிழில்)

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்ர ஸத நாமாவளி (தமிழில்)... சத்-திலா ஏகாதசி அன்று சொல்லவேண்டி, விஷ்ணு அஷ்டோத்திர ஸத நாமாவளி பற்றி பலரும் நமது Whatsapp குழுவில் கேட்டதால் இதோ...  விஷ்ணு அஷ்டோத்திரம் 'சத்-திலா ஏகாதசி' அன்று ஒருநாள் மட்டும் தான் சொல்லவேண்டும் என்பதில்லை. வாய்ப்பு இருக்கும் பொழுது தினமும் கூறலாம். 'சத்-திலா ஏகாதசி' யின் விரத மகிமை பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்... ஹரி ஓம்... ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ வெங்கடேசாய... ...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்... நன்றி ... ஒரு துளி ஆன்மீக ஸேவையில், தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,  திருநெல்வேலி... 

துரதிர்ஷ்டம் மற்றும் வறுமை நீக்கும் ஷட்-திலா ஏகாதசி மகிமை...

ஷட்-திலா ஏகாதசி /  மக க்ருஷ்ண  ஏகாதசி... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "ஷட்-திலா  ஏகாதசி" ( Sat-Thilaa Ekadasi)  என்று    அழைக்கப் படுகின்றது.  ('திலா' என்றால் 'எள்' என்று அர்த்தம்)  ஷட்-திலா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர ' புராண விளக்கம்:  சிகீதையன் என்பவரது மகனான தல்ப்ய மகரிஷி, ப்ரம்மாவின் வழித்தோன்றலான புலஸ்திய முனிவரிடம் கேட்கிறார் ... முனிவரே,  இந்த உலகத்தில் ஒரு ஆன்மா ஒரு உடலை எடுத்தவுடன், பல பாவங்களை செய்யும் எண்ணம் வந்து விடுகிறது. திருடுதல், தவறான உறவு, மேலும் மிக உயர்ந்த பாவமான ப்ராமணரை கொல்லுதல் போன்ற பாவச்செயல்களை செய்கின்றனர். இதன் மூலம் பர வாழ்வில் அவர்கள் நரகத்திற்கு செல்கின்றனர். மற்றும் இக வாழ்வில் துரதிர்ஷ்டம் மற்றும்

போகி & மகர சங்க்ராந்தி அர்த்தம் என்ன ? மஹா பெரியவா உரை...

போகிப் பண்டிகை மற்றும் மகர சங்க்ராந்தி உண்மையான அர்த்தம் என்ன ? மஹா பெரியவா ஆற்றிய உரையில் இருந்து... போகிப்   பண்டிகை: ஒவ்வொரு ஆண்டும் , தட்சிணாயணம் , உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரிக்கப்படுகின்றது . ஆறு மாதம் தட்சிணாயணம் . ஆறு மாதம் உத்திராயணம் . சங்கராந்தி முதல் - பொங்கல் முதல் , உத்திராயணம் வருகிறது . உத்திராயணம் வடக்கு நோக்கி சூரியனுடைய நிலைமாறுகிறது . அவருடையே போக்கு மாறுகிறது . ஆகவே ஒளி அதிகமாகக் கூடுகிறது . அதற்கு முன் ஒளி சற்று குறைவாக இருக்கும் . அதை வைத்துத்தான் சங்கராந்தி நல்ல ஒளியோடு தொடங்கும் நாள் என்று சொல்லப்படுகிறது . அதை வைத்துத்தான் சபரிமலையிலும் ஜோதி தரிசனம் வைத்திருக்கிறார்கள் . உத்திராயணம் முதல் , மங்கள காரியங்களை செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன . ஆனால் , தட்சிணாயணத்தில் மங்கள காரியங்கள் செய்ய மாட்டார்கள் . தட்சிணாயணம் என்பது தேவர்களின் இரவு காலம் . ஆகவே இரவு காலத்தில் எந்த மங்கள காரியமும் செய்யக்கூடாது . உதயகாலம் முதல் எல்லாம் செய்யலாம் . ஆகவே தை மாதம் முதல் அனைத்து க

வைகுண்ட ஏகாதசி சிறப்புகள் மற்றும் விரத முறை...

வைகுண்ட ஏகாதசி...  வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் ... நாம் பொதுவாகவே மாதந்தோறும் வரும் 2 ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும்.. இது நமது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து அதனை பலப்படுத்துவதற்காகவும் நமது எண்ணம் (சிந்தனா சக்தி) உயர்வாக மாறவும்  செய்யப்பட்ட ஏற்பாடு...  ஆனால், தற்போதைய "நவீன" (??!!) காலத்தில் அவ்வாறு மாதம் தோறும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் 'வைகுண்ட ஏகாதசி' ஒரு தினம் மாத்திரம் உபவாசம் இருப்பின் மிக, மிக நன்று... ஒரு வருடம் உபவாசம் இருந்த பலன் கிடைக்கும். உபவாசம் இருந்து மனதை விழிப்பு நிலையில் நிறுத்தி உங்களது நியாயமான கோரிக்கைகளை /ப்ரார்த்தனைகளை பெருமாளிடம் கேளுங்கள், நிச்சயம் வேண்டுதல் கைகூடும்...  ஏகாதசி விரத மகிமை பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளது... நமது, இணைய தளத்தில் ஒவ்வொரு மாத ஏகாதசி பற்றியும் அதற்குரிய புராண விளக்கங்களையும், புராண பெயர்களோடு விரிவாக எழுதி வருகின்றோம்... சாதாரணமாக, ஒருவர் சாப்பிடும் பொழுது நாம்  தடுக்க கூடாது. அது மஹா பாவம் ... ஆனால் ஏகாதசி அன்று மாத்திரம் நாம் ஒருவரை அன்னம் (அரி