ரமணாஸ்ரமம் பற்றிய முழு தொகுப்பு: (A Complete Guide about 'Ramanasramam'...) அமைவிடம்: அகிலம் முழுக்க ஆர்வமுடன் பார்க்கும் ஆன்மீக பூமியாம் பாரதத்தாயின் பாதங்களாய் அமைந்துள்ளவை தமிழகமும் கேரளமுமாகும். இதில் தமிழகத்தின் வட பகுதியில் தலைநகரமாம் சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் தென்மேற்கில் அமைந்துள்ள மலைநகரம் திருவண்ணாமலையாகும். இது நினைக்க முக்தி தரும் அருணாச்சலம் என்று அழைக்கப்படுகிறது. விழுப்புரம்-காட்பாடி புகை வண்டிப் பாதையும் இத்தலத்தைத் தழுவிச் செல்கிறது. இது பெங்களூர் திருப்பதி போன்ற பெரு நகரங்களுக்கும் சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்து மாவட்ட ஆட்சித் தலைநகரமாகவும் உள்ளது. நகர மையத்திலிருந்து பெங்களூர் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் ஸ்ரீரமணாஸ்ரமம் அமைந்துள்ளது. ரமண மகரிஷியின் பால பருவம் (பகுதி -1) பற்றி நமது முந்தைய பதிவினை படிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்... ரமண மகரிஷியின் திருவண்ணாமலை விஜயம் (பகுதி-2) பற்றி படிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்... நுழைவு வாயில்: கிரிவலப் பாதையில் சேஷாத்ரி சுவாமி ஆஸ்ரமத்தை கடந...