ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்:
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் கூற வேண்டியுள்ளது. தினசரி மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை உள்ள கால கட்டம் 'பிரதோஷ காலம்' தான்...
...ஓம் நம ஷிவாய...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.
சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.
பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணனை கயிலாய மலையின் கீழே இருந்து விடுவித்தார்.
சிவபெருமான் உள்ளம் குளிர்ந்து நடனம் ஆடியதாலேயே, இந்த துதி "ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம்" என்று அழைக்கப்படுகிறது.
பிரதோஷ வேளையில், இந்த 'ஷிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை' நாம் இசைக்க செய்வதின் மூலம், நாம் அனைவரும் அந்த ஈசனின் அருள் பெறும் பாக்கியசாலிகள் ஆகின்றோம்.
இதனை, சிவ ராத்திரி, பிரதோஷம் மற்றும் சிவபூஜை முடிந்து தீப ஆராதனை காண்பிக்கும் முன்பு பாடுவதின் மூலம் ஈசன் உள்ளம் குளிர்வது உறுதி...
இதனை ஒருமுறை கேட்கும் பொழுதே நீங்களும் அந்த அதிர்வினை (Positive Vibration) உணரலாம். கண்டிப்பாக மறுமுறை கேட்காமல் இருக்க முடியாது, அந்த அளவுக்கு அதன் தாள, சந்த நடை இருக்கும்.
இனி, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், பிரதோஷ வேளைகளிலும் மற்றும் சிவ பூஜை செய்து முடிக்கும் நேரங்களிலும் இந்த 'ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம்' படிப்போம் / பாடுவோம் / இசைப்போம். ஈசன் அருள் பெறுவோம்...
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் கூற வேண்டியுள்ளது. தினசரி மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை உள்ள கால கட்டம் 'பிரதோஷ காலம்' தான்...
எப்படி, அதிகாலை 'ப்ரம்ம முஹூர்த்தம்' (அதிகாலை 04:30 {A.M} முதல் 06:00 {A.M} மணி வரை ) முக்கியம் என்று கருதப்படுகிறதோ அதே அளவு இந்த மாலை வேளை 'பிரதோஷ காலம்' முக்கியமானதாகும். இந்த இரு நேரங்களுமே, நமது தியானத்திற்கும், ஆன்மீகத்திற்கும் நம்மை முன்னேற்றும் விஷயத்தை பற்றி சிந்திக்கவும், செயல்படுத்தவும் உரிய கால கட்டம் ஆகும். ஆகவே தான், அந்த நேரங்களில் உண்பதும், உறங்குவதும் தவிர்க்க பட வேண்டியவை என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தினசரி கடைபிடிக்க முடியாவிட்டாலும், பிரதோஷம் அன்று (15 நாட்களுக்கு ஒருமுறை வரும் திரயோதசி திதி அன்று) ஒரு நாள் மட்டுமாவது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
அதற்கு முயற்சி செய்வோம்...
...ஓம் நம ஷிவாய...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment