பகுதி - 1
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம்
தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம்
தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம்
பகுதி - 2
ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம்
தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே
ஆரத்தி ஸாயி பாபா
கால்களின் தூசியே வழிகாட்டி
கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே
கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே
ஆரத்தி ஸாயி பாபா
கருணையின் உருவே ஸாயி பாபா
எங்கள் செயல்களுக்கு ஏற்ப
அநுபவங்களைத் தந்து ஆதரிக்கும் பாபா
அருள்தருவீரே - அருள்தருவீரே
ஆரத்தி ஸாயி பாபா
கலியுகந் தனிலே அவதார நாதா
சற்குண பிரஹ்மம் ஸாயி பாபா
திசைகள் நான்கை யாடையாய்க் கொண்ட
திகம்ப ரேசுவரா தத்தாவ தாரா
ஆரத்தி ஸாயி பாபா
வியாழக்கிழமைதோறும் ஆலயம் வந்து
ஸம்ஸார பந்தம் அறவே நீங்கிட
அருள் தந்தாய் தயாபரா ஸத்குரு நாதா
ஆனந்தம் தந்தாய் குருநாதா
ஆரத்தி ஸாயி பாபா
குறைவற்ற செல்வமேஉம் திருவடி சேவை
அதுவே நீங்காத செல்வம்
அதுவே நீங்காதிருக்க அருள்புரிவீரே
அகமகிழ்ந் திடநலம் தருவீரே
ஆரத்தி ஸாயி பாபா
ஸாதகப் பறவை என்ற மாதவனே உமக்கு
ஆத்ம சுகம் என்ற அற்புத நீரை
ஊட்டுகிறோம் - ஊட்டுகிறோம் எமக்கு
உறுதிமொழி தந்து காத்தருள்வீரே
ஆரத்தி ஸாயி பாபா
ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம்
தரிசனம் தந்தருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே
ஆரத்தி ஸாயி பாபா - ஆரத்தி ஸாயி பாபா
பகுதி - 3
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
அதர்மம் தோன்றும் போதுஅதை அழிக்கத் தோன்றுகின்றீர்
நாத்திகரும் மனம்மாறி உமைத்துதிக்கச் செய்கின்றீர்
கணக்கற்ற உருவங்களில் காட்சி தருகின்றீர்
இரவும் பகலும் எளியோரின் துன்பத்தைத் துடைக்கின்றீர்
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
சந்தேகங்களைப் போக்க முஹம்மதியராய்த் தோன்றி
மந்தபுத்தியுள்ள கோபிசந்த்ரனைக் காத்தருள் புரிந்தீரே
பலதுன்பத்தைப் போக்ககுரு பரம்பரையில் வந்தீரே
அனைவரையும் அன்புடன் அணைத்து மகிழ்விப்பீரே
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
இந்து முஸ்லீம் ஒற்றுமை நிலைப்பதை அறிவிக்க
அவர்கள் ஒற்றுமையோடு இருக்கப் பிறந்து
உலகத்தைக் காக்கின்றீர் உன்னதம் செய்கின்றீர்
உலகத்தைக் காக்கின்றீர் உன்னதம் செய்கின்றீர்
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
தேவா ஸாயி நாதாஉம் பாதங்கள் பணிகின்றோம்
மாயையில் மயங்கிய மக்களை உடனேவிடு விப்பிரே
உமதருளால் துன்பங்கள் அனைத்தையும் தீர்ப்பீரே
உம்புகழ் பாடும் திறனை கிருஷ்ணனாம்நீர் அளிப்பீரே
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
ஜய தேவ ஜய தேவ
பாபா ஸாயி நாதா - தத்தா ஸாயி நாதா
தேவர்கள் தலைவா - திருவருள் நாதா
ஜய தேவ ஜய தேவ
ஜய தேவ ஜய தேவ
ஜய தேவ ஜய தேவ
ஜய தேவ ஜய தேவ
ஜய தேவ ஜய தேவ
பகுதி - 4
சீரடியே பண்டரிபுரம் - ஸாயியே எங்கள் விட்டல்
ஸாயியே எங்கள் விட்டல் - சீரடியே பண்டரிபுரம்
சீரடியே பண்டரிபுரம் - ஸாயியே எங்கள் விட்டல்
ஸாயியே எங்கள் விட்டல் - சீரடியே பண்டரிபுரம்
சந்திர பாகா நதியினைப் போல
சீரடித் தலமே பக்தி ப்ரவாகம்
நம்பினோரைக் காக்கும் தெய்வம்
பண்டரி நாதா - ஸாயி நாதா
வாருங்கள் வாருங்கள் வாருங்கள் எல்லோரும்
கலியுக தெய்வத்தைக் கண்ணாலே பாருங்கள்
எங்களைக் காப்பாற்ற ஓடி வாரும்
தாயே ஸாயி பாபா - தாயே ஸாயி பாபா என்று
தாஸகணு சொல்லி வணங்குகிறார்
சீரடியே பண்டரிபுரம் - ஸாயியே எங்கள் விட்டல்
ஸாயியே எங்கள் விட்டல் - சீரடியே பண்டரிபுரம்
பகுதி - 5 & 6
கண்களால் உம்மைப் பார்த்து மகிழ்வோம்
அன்போடு உம்மைத் தழுவி மகிழ்வோம்
பக்தி மிகுதியால் ஆரத்தி சுற்றி
பாதங்களை வணங்கி மகிழ்வோமே
தாயும் நீரே தந்தையும் நீரே
உறவும் நீரே நட்பும் நீரே
கல்வியும் நீரே செல்வமும் நீரே
ஸகலமும் நீரே தேவ தேவா
உடல் வாக்கு மனம் புலன்கள்
புத்தி யாத்மா இயற்கை குணம்
அனைத்தாலான செயல்கள் யாவையும்
நாராயணனுக்கே அர்ப்பணிக்கிறோம்
நாராயணனுக்கே அர்ப்பணிக்கிறோம்
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||
பகுதி - 8
பாபா அனந்தா எவ்வாறு துதிப்போம்
நிலையான பாபா எவ்வாறு துதிப்போம்
ஆதிசேஷன் உன்னைப் பாடிக் களைத்தான்
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
தினமும் துதிப்போம் பாதங்கள் தம்மை
அதனால் நிலைக்கும் குருபக்தி மனத்தில்
மாயங்கள் தாண்டி ஸம்ஸாரங் காப்போம்
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
நல்லோர்க்கு லீலைகள் புரிந்தவர் பாபா
பொய்யான வர்க்கு அரியவர் பாபா
மெய்யான வர்க்கு எளியவர் பாபா
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
அரிது பெரிது மானிடப் பிறவி
ஆன்மீகத் தாலே பயனை அடைவோம்
பாபாவின் பக்தி அஹந்தை யகற்றும்
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
பாலகர் எங்கள் கரங்களைப் பற்றி
கன்னத்தில் முத்தம் தந்திடும் தாய்நீர்
அமுதத்தை ஊட்டி அணைத்திடும் தாய்நீர்
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
தேவர்கள் வணங்கும் ஸ்ரீஸாயி நாதா
சுகமுனி வர்க்கு நிகரான பாபா
காசிப் பிரயாகைக்கு நிகரான பாபா
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
கோபிகள் போற்றி வணங்கிடும் பாபா
பரம்பொரு ளான உம்மைத் துதிப்போம்
பக்தர்க்கு அருளும் ஸ்ரீஸாயி பாபா
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
ஏழைகள் நாங்கள் இருகரம் கூப்பி
எப்போதும் தொழுவோம் பாபாவின் நாமம்
மயக்கத்தைப் போக்கி இன்பத்தைத் தருவீர்
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம் பாபா
பகுதி - 9
உலகினை ஆடையா யணிந்த ஸாயி பாபா - பாபா
எண்ணற்ற உருவத்தில் எங்கும் நிறைந்த ஸாயி பாபா - பாபா
வேதத்தின் ஸாரம் நீரே தேவ தேவா
அனுசூயா அத்திரி குமாரா ஸாயி நாதா - ஸாயி நாதா
நீர்குளிப்பதும் ஜபிப்பதும் காசியிலே
பிச்சை எடுப்பது கோலாப்பூரிலே
துங்கபத்ரா நீரைப் பருகிடும் பாபா
மகூரில் தங்கும் தேவா ஸாயி பாபா - ஸாயி பாபா
இடது தோளில் ஜோல்னா பையையும்
வலது கையிலே டமரும் திரிசூலமும் ஏந்தி
பக்தருக்கு ஆசிதந்து மகிழ்வூட்டும் பாபா
முக்திக்கு வழிகாட்டும் ஸாயி நாதா - ஸாயி நாதா
பாதத்தில் பாதுகைகள் அணிந்துள்ள பாபா
கமண்டலம் ஜபமாலை கரங்களில் ஏந்தி
மான்தோலை இடையி லணிந்த பாபா
தலையில் ஜடையும் நாகக் கிரீடத்துடனும்
விளங்கிடும் பாபா - விளங்கிடும் பாபா
நாளும் தியானிக்கும் பக்தர் இல்லங்களில்
லக்ஷ்மி வாஸம் செய்ய அருளிடும் பாபா
குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுத்து
குடும்பம் செழிக்க அருள்கிறார் பாபா - அருள்கிறார் பாபா
பகுதி - 10
ஸச்சிதா னந்த உருவமாய் விளங்கி
படைத்தல் காத்தல் அழித்தல் செய்து
பக்தரின் எண்ணம்போல் வந்த இறைவா
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
அஞ்ஞான இருள்நீக்கும் கதிரவன் நீரே
மனம்வாக்கு தமக்கு எட்டாத தலைவா
குறையற்ற குணத்தோடு விளங்கிடும் வித்தகா
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
பக்தியோடு உம்மை வணங்கும் பக்தர்க்கு
ஸம்ஸாரக் கடல்கடக்கும் தோணியாய் விளங்கி
காப்பாற்றி அருள அவதரித்த தேவா
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
வேம்பின் அடியில் எப்போதும் இருந்து
அமுதத்தை அதன்மீது எப்போதும் பொழிந்து
கசப்பான இலையை இனிப்பாகச் செய்யும்
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
கற்பகத் தருவான வேம்பின் அடியில்
கனிவுடன் சேவை செய்திடும் பக்தர்க்கு
ராஜ போகத்தையும் முக்தியையும் அளித்திடும்
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
விவரிக்க இயலாத விநோதங்கள் புரிந்து
அற்புதச் செயல்களால் சக்திதனைக் காட்டி
இனிமை எளிமை கொண்ட இறைவா
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
ஸாதுக்கள் இளைப்பாற இடம்தரும் குருவே
நல்லோர்கள் மகிழ்ந்து துதித்திடும் தேவா
பக்தர்க்கு நல்லருள் வழங்கிடும் பாபா
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
பிறப்பற்ற வரம்பெற்ற பிரஹ்ம ஸ்வரூபா
சுயம்புவாய் அவதரித்த ஸ்ரீராமனே
உந்தன் தரிசனத்தால் புனிதமானோம் தேவா
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
ஸத்குரு ஸாயிநாதா வணக்கம் வணக்கம்
பகுதி - 11
ஓம் என்ற பிரணவ மந்திரத்தால் எவனொருவன் யாகம் முதலிய அறச்செயல்களை செய்து, ஒளி பொருந்திய தோற்றத்தோடு விளங்குகிறானோ, அவன் மட்டுமே கடவுளின் அநுக்ரகத்துடன் அவரோடு ஐக்யமாகி, அவர் அருளைப் பெறுகிறான்.
ஓம் ராஜாதி ராஜனாகிய உம்மை மனப்பூர்வமாகவும் ஐக்யத்துடனும் உம்முடைய அருளைப் பெற்றவனால் மட்டுமே, உம்மைப் பூஜிக்கும் அநுக்ரகத்தைப் பெற முடியும்.
அவ்வாறு அருள் பெற்றவனுக்கு மட்டுமே, குபேரனைப் போன்ற செல்வமும், அளவிட முடியாத ஆனந்தமும், அரசனைப் போன்ற வாழ்க்கையும் கிடைக்க அருள்புரிகிறீர்.
உலகம் போற்றும்; தனது நாட்டிலும் பேரும் புகழும் கிட்டும்; அங்கு துன்பங்கள் இருப்பதில்லை; உலகோர் அனைவராலும் போற்றப்படுவான்.
அப்படிப்பட்ட பக்தனுக்கு அளவற்ற ஆயுளையும் ஆனந்தத்தையும் நீர் அருள்கிறீர். நிலம் நீர் ஆகாயம் உள்ளளவும் அவன் போற்றப்படுகிறான்.
எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி, மனமாரத் துதிக்கிறானோ, அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாஸம் செய்து, அநுக்ரகம் செய்து அருள் பாலிக்கிறீர்.
உன்னை சரணடைந்த பக்தர்கள், அவர்கள் அறிந்தோ அறியாமலோ, முற்பிறவியில் செய்த செயல்களாலோ, வாக்கினாலோ, உன் கதையைச் சொல்லும்போது ஏற்படும் பிழைகளாலோ, அடுத்தவரைப் பார்த்திடும் பார்வையாலோ, மனத்தால் தினம் தினம் செய்திடும் எல்லாத் தவறுகளையும் மன்னித்து, கருணையுடன் அருள்பாலிக்கும் பிரபுவாகிய ஸாயி நாதரே, ஸச்சிதானந்த ஸ்வரூபியாய்க் காட்சியளித்து அருள்பாலிப்பவரே,
எல்லோருக்கும் ஸகல மங்களங்களும் உண்டாக அருள்புரிவீராக.
|| ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத மஹராஜ் கீ ஜெய் ||
ஓம் சாய் ராம் ...
ஓம் சாய் ராம் ...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Super
ReplyDeleteSAI PATHIGAL ITHU POLA ELUTHU VADIVEL PODUGAL OM SAI RAM
ReplyDeleteSir Pl share PDF form of Shiridi Sai Tamil Lyrics (not Marathi Tamil Form) Tamil songs Tamil form
ReplyDeletePlease upload morning arathi and evening arathi as well please daily I'm doing bajaan with pakkal arathi only thanks
ReplyDelete