Skip to main content

Posts

Showing posts from November, 2019

ஸ்ரீ ஐயப்பன் சஹஸ்ர நாமாவளி...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா...  கார்த்திகை மாதம், பல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலை செல்ல உள்ளனர்... பல இடங்களிலும் ஐயப்ப பூஜை மற்றும் பஜனைகள்  நடைபெற்று வருகின்றது... மேலும், பல இடங்களில் சுவாமிக்கு , லட்சார்ச்சனையும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பக்தர்களின் நலன் கருதி 'ஐயப்பனின் சஹஸ்ர நாமாவளி' யை இங்கு கொடுத்துள்ளோம்... இதனை அப்படியே அச்சுப்பிரதி (Print) எடுத்துக்கொள்ளும் வகையில் கொடுக்கப் பட்டுள்ளது... அதில், ஏதாவது சிரமம் இருப்பின் நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' Whatsapp எண்ணிற்கு (+91 6379338850) ஒரு Whatsapp Message அனுப்புங்கள். 'ஐயப்ப ஸஹஸ்ர நாமாவளி' யை .PDF File வடிவில் (A 4 Paper இல்)    Print எடுப்பதற்கு ஏற்ற வகையில் அனுப்பி வைக்கிறோம்... (13 Pages) ஸ்வாமியே சரணம் ஐயப்பா ... ஸ்வாமியே சரணம் ஐயப்பா ... உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்... நன்றி ... ஒரு துளி ஆன்மீக ஸேவையில், தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, திருநெல்வேலி ...

ஆயுர் வேத குறிப்பு - எதிரிடையான உணவும், நோய்களும் ?

எதிரிடையான உணவும் நோய்களும்... மனதில் நிம்மதி குலைவதற்கு மோசமான  திரைப்படங்களும், உணவு வகைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உணவு வகைகளில் எதை , எதனுடன் சேர்த்தால் விஷமாகும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்ற ஒரு துல்லிய நோட்டம் நம் முன்னோர்களுக்கு இருந்தது. ஒரு சில உதாரணங்களுடன் உணவு வகைகளின் சேர்க்கை விஷத் தன்மை அடைவது குறித்து பார்ப்போம். 1. சர்வம் அம்லம் பயஸா ஏகத்யம் விருத்தம்: - நீர்ப் பொருளோ அல்லது திடமானதோ அனைத்து புளிப்பு வஸ்துக்களும் பாலுடன் சேர்த்து சாப்பிடுதல் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். 2. தத : உத்தரம் வா பலம் ச விருத்தம் : புளிப்புச் சுவையுள்ள கனிகள் பாலுக்கு முன்பும் பின்பும் அருந்தக்கூடாது. 3. குலத்த மாஷ  வாட பாவா : ச :- கொள்ளு, உளுந்து, வரகு, மொச்சை இவைகளும் பாலுடன் சேரும் போது பகையானவை. 4. மூலகாதி ஹரிதகம் பக்ஷயித்வா குஷ்ட பாத பயாத் பய : நஸேவ்யம் :- முள்ளங்கி, பட்டை, அவரைக்காய் முதலான பச்சைக் கறிகாய்களை புசித்து, அதன் பின், பால் அருந்துக் கூடாது. அப்படிப் பருகினால் குஷ்ட நோய் உண்டாகும். 5. க்ஷீரேண லவணம், மூலகேன மாஷரூபம் :- பாலுடன் உப்பையும், மு...

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...