ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஷண்முக கவசம்... அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள ( து ) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க . ... ... ... ... (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க . ... ... ... ... (2) இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க , வாயை முருகவேள் காக்க , நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க . ... ... ... ... (3) ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க , எந்தன் ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க . ... ... ... ... (4) உறு...