Skip to main content

Posts

Showing posts from September, 2019

புற்றுநோய் - (Cancer) தடுக்க எளிய வழி என்ன ?

புற்றுநோயை தடுப்பது எப்படி ? மார்ச் 2016 ல் புதுடில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் நடிகை மனீஷா   கொய்ராலா , சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் உரையாடினார் ... இதில் ஆரோக்கியம் பற்றி பல விஷயங்களை சத்குரு அவர்கள் தெளிவுபடுத்தினார் . அதிலிருந்து புற்றுநோய் சம்பந்தபட்ட பகுதி உங்களுக்காக இதோ ... கேள்வி ( நடிகை   மனீஷா   கொய்ராலா)  : அடிப்படையில் , புற்றுநோய் என்றால் என்ன ? அதைத் தடுக்க வழி உள்ளதா ? சத்குருவின் பதில் : நம் உடல் முழுக்க அணுக்கள் உள்ளன . நம் ஒவ்வொருவர் உடலிலும் 10,000 கோடிக்கும் அதிகமான அணுக்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் . இந்த ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியமாக வாழும் அடிப்படையில்தான் இயங்குகின்றன , அப்படித்தான் அவை உருவாக்கப்பட்டுள்ளன . அதாவது , அதன் பிழைப்பும் , அது எந்த உயிரினத்தில் உள்ளதோ அதன் பிழைப்பும் நல்லபடியாக நிகழும் விதத்தில் அவை செயல்படுகின்றன . ஆனால் இதில் ஒருசில அணுக்கள் மட்டும் குறுக்குவழியில் செயல்படும் . “ அடுத்த அணு இருந்தால் என்ன ? இல்லையென்றால் என்ன ?” என்று அவ

முன்னோர் செய்த பாவங்களை தீர்க்கும் இந்திர ஏகாதசி...

முன்னோர் செய்த பாவங்களை, நாம் தீர்க்க வழி செய்யும் இந்திர ஏகாதசி...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் ஏகாதசி விரதம் என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.  'அஸ்வினி' (Aswini) மாதம்,  ( August / September )   தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "இந்திர ஏகாதசி" (அ) "அஸ்வினி கிருஷ்ண பட்ச  ஏகாதசி"  (Indira Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  ஒவ்வொரு ஏகாதசியின் பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கும் "பிரம்ம வைவர்த்த புராணத்தில்" இருந்து இந்திர ஏகாதசிக்கு உண்டான மகிமையை பார்ப்போம்... ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மஹாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், யுதிஷ்டிரர் அஸ்வினி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விளக்கமாகக் கூறும் படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்.. அதற்கு, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாராஜா யுதிஷ்டிரரே, இந்த ஏகாதசி &q

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்

வாமன ஏகாதசி (அ) பார்ஸ்வ ஏகாதசி மகிமை ...

வாமன ஏகாதசி / பார்ஸ்வ ஏகாதசி /  பரிவர்த் தினி ஏகாதசி  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'பத்ரபாத' (Pathrabaadha) மாதம்,  ( August / September )   வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பார்ஸ்வ ஏகாதசி" (அ) "வாமன ஏகாதசி" (அ) "பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி" (அ) "பத்ரபாத சுக்ல பட்ச  ஏகாதசி"    {  पारसवा एकादसी  /  वामन  एकादशी } (  Parsva   Ekadasi / Vamana Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  "வாமன ஏகாதசி" பற்றிய ப்ரம்ம வைவர்த்த புராண விளக்கம்: பிரம்ம - வைவர்த்த புராணத்தில் , ஸ்ரீ கிருஷ்ணர்   மற்றும் மஹாராஜா யுதிஷ்ட்ரர் இந்த நாளின் சிறப்பு பற்றியும், என்றும்  அழியாத மகிமைகளைப் பற்றியும் விவாதிக்கின்றனர் .  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், இந்த வாமன ஏகாதசி பற்றிய மகிமையை விளக்குங்கள் என்று, யுதிஷ்டிரர் கேட்கிறார்.