புற்றுநோயை தடுப்பது எப்படி ? மார்ச் 2016 ல் புதுடில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் நடிகை மனீஷா கொய்ராலா , சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் உரையாடினார் ... இதில் ஆரோக்கியம் பற்றி பல விஷயங்களை சத்குரு அவர்கள் தெளிவுபடுத்தினார் . அதிலிருந்து புற்றுநோய் சம்பந்தபட்ட பகுதி உங்களுக்காக இதோ ... கேள்வி ( நடிகை மனீஷா கொய்ராலா) : அடிப்படையில் , புற்றுநோய் என்றால் என்ன ? அதைத் தடுக்க வழி உள்ளதா ? சத்குருவின் பதில் : நம் உடல் முழுக்க அணுக்கள் உள்ளன . நம் ஒவ்வொருவர் உடலிலும் 10,000 கோடிக்கும் அதிகமான அணுக்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் . இந்த ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியமாக வாழும் அடிப்படையில்தான் இயங்குகின்றன , அப்படித்தான் அவை உருவாக்கப்பட்டுள்ளன . அதாவது , அதன் பிழைப்பும் , அது எந்த உயிரினத்தில் உள்ளதோ அதன் பிழைப்பும் நல்லபடியாக நிகழும் விதத்தில் அவை செயல்படுகின்றன . ஆனால் இதில் ஒருசில அணுக்கள் மட்டும் குறுக்குவழியில் செயல்படும் . “ அடுத்த அணு இருந்தால் என்ன ? இல்லையென்றால்...