அரிச்சந்திரனை மீண்டும் மன்னனாக்கிய 'அஜ ஏகாதசி / அன்னதா ஏகாதசி' விரதம்...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....
'பத்ரபாத' (Pathrabaadha) மாதம், (August / September) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "அஜ ஏகாதசி" (அ) "அன்னதா ஏகாதசி" (அ) "பத்ரபாத கிருஷ்ண பட்ச ஏகாதசி" { अज एकादशी / अन्नदा एकादशी } (Aja Ekadasi / Annadha Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது.
அஜ / அன்னதா ஏகாதசி பற்றிய பிரம்ம வைவர்த்த புராண விளக்கம்:
இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் தமது பூர்வ ஜென்ம பாவங்களின் கர்ம வினைகளில் இருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
அஜ ஏகாதசி என்பது
வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும்.
இந்த அஜ
ஏகாதசி விரதத்தின்
மகிமையைப் பற்றி,
மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக தொகுத்துள்ளோம் ...
முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், மன்னரும் எந்த விதமான குறையும் இன்றி மிகவும் சுபிட்சத்தோடு இருந்தனர்.

விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா
தனது நாடு,
நகரம் அனைத்தையும்
இழக்க நேரிட்டதோடு,
மனைவி, மக்களையும்
விற்கும் மிகக்
கொடிய நிலைக்கு
தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும்
சண்டாள குலத்தவனுக்கு
அடிமையாக்கி மயானத்தைக்
காக்கும் பணியில்
அமர வைத்தது
விதி. ஆனால்
அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை
இழக்காமல் சத்தியத்தினை
கைவிடாது கடைபிடித்து
வந்தார்.
பல காலங்கள் கடந்தன. இந்த நிலையில் மனம் வருந்தி, ஒரு நாள்
அவர், நான்
என்ன செய்வேன்
? இன்னும் எத்தனை
காலம் இது
போன்ற வேதனையில்
வாடுவது, இதிலிருந்து
மீள வழியே
இல்லையா? என்று
மிகவும் வருந்தினார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக,
அந்த
வழியாக சென்ற
கௌதம முனிவரைக்
கண்டவுடன் மிகவும் மனம் மகிழ்ந்து, அவருக்கு 'சாஷ்டாங்க நமஸ்காரம்' செய்து, இருகரம் கூப்பி வணங்கி, தனது
நிலைமையை எடுத்துக்
கூறி, தான் இருக்கும் இந்த இழி நிலையில் இருந்து மீள ஒரு உபாயம் கூறுமாறு வேண்டி வணங்கினார்.
கௌதம மகரிஷி கூறிய உபாயம் என்ன ?
அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், மன்னராக இருந்த ஒருவன், தற்பொழுது பிணங்களில் இருந்து துணிகளை எடுக்கும் பணியினை செய்யும் அளவுக்கு வந்த விதியின் நிலையை, தனது மனதில் எண்ணியவாறே...

அரிச்சந்திரா
!!! உனது நல்ல
காலம் வெகு அருகில் வந்து விட்டது... ஆம், இன்னும்
ஏழு நாட்களில், பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தையும்
நீக்கி மிகவும்
நற்பலன்களை அளிக்கவல்ல, பத்ரபாத மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில், 'அஜ ஏகாதசி'
எனப்படும் 'அன்னதா
ஏகாதசி' வரவிருக்கிறது.
இந்நாள் மிகவும்
மங்களமானது.
(Editors Note: இந்த இடத்தில் நாம் ஒன்று புரிந்து கொள்ளலாம். நமது பூர்வ ஜென்ம விதி வசத்தால் நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களில் இருந்து விடுபட நாம் செய்திருந்த ஏதோ ஒரு சில நற்செயல்கள் மூலமாக இது போன்ற கர்ம வினையில், கர்ம சுழலில் இருந்து விடுபடும் மார்க்கம் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகிறது. நாம் தான் அதனைப் புரிந்து, உணர்ந்து, அதற்கேற்ப நடந்து நமது கர்ம வினையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.)
சரி...மீண்டும் புராணத்தினுள் நுழைவோம்...
இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், முழு உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று நாள் முழுவதும் பகவான் ஸ்ரீ ஹரி நாமத்தை உச்சரித்தும், மனதார தொழுதும் அவரை வேண்டுவாயாக. அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிரு... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை விரைவில் அடைவாய் எனக் கூறி உடனடியாக அந்த இடத்திலிருந்து மறைந்து விட்டார்.

ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன்:
அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி,
அஜ ஏகாதசி
நாளில் உபவாசம்
இருந்து அவனது
பாவங்கள் அனைத்தும்
நீங்கி, தனது நரக வாழ்வில் இருந்து மீண்டு, தனது நாடு நகரத்தினைப்
பெற்று பழைய நன்னிலையை
அடைந்தார்.
மேலும் இந்த விரதத்தின் பலனால், மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.

அஜ ஏகாதசியின் சிறப்புகள்:
மேலும், கிருஷ்ணர் கூறுகையில், ஓ பாண்டு புத்ரா !! நீயும்
இப்போது இந்த
அஜ ஏகாதசியின்
சிறப்புகளை அறிந்து கொள் !! இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம்
முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப்
பிறவியில் நாம்
அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது.
இதனால், இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் அனைவரும், இக வாழ்வில் மன்னர் போல் வாழ்வு பெற்று, பின்னர் பர வாழ்வில் முக்தி அடைவர் என்று
கூறினார்.
அஸ்வமேத யாகம் செய்த பலன்:
எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை
விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது
படிக்கிறாரோ அல்லது பிறருக்கு சொல்கிறாரோ அவர் அஸ்வமேத
யாகம் செய்த
பலனை அடைவார்
என ஸ்ரீகிருஷ்ணர்
யுதிஷ்டிரனிடம் கூறினார் என்று "பிரம்ம
வைவர்த்த புராணம்" விவரிக்கின்றது.
ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும் 'அஜ / அன்னதா ஏகாதசி' தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:
- வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளைகளோ இருக்கலாம்.)
- வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம்.
- (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலமும், அன்று பகவான் ஸ்ரீ ஹரி நினைவாகவே இருப்பதன் மூலமும், 'அஸ்வமேத யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.
Editors Note:
(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook etc, etc...} ஒவ்வொரு ஏகாதசிக்கும் முதல் நாள் தசமி திதி அன்று 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)
'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்..... (W04)
ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...
பின் குறிப்பு:
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.
வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு, பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும் தெரியப்படுத்தலாம். (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...)
ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
'சாஷ்டாங்க நமஸ்காரம்' பற்றிய காஞ்சி மஹா பெரியவா உரையினைப் படிக்க இங்கு சொடுக்கவும்...
Please click here to read a wonderful explanation by "Kanchi Shri Maha Periyava", about "Saashtaanga Namaskaram".
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
மிக்க உபயோகமான தகவல். நன்றி.
ReplyDeleteராதே கிருஷ்ணா!
ReplyDelete