அரிச்சந்திரனை மீண்டும் மன்னனாக்கிய 'அஜ ஏகாதசி / அன்னதா ஏகாதசி' விரதம் ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 'பத்ரபாத' (Pathrabaadha) மாதம், ( August / September ) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "அஜ ஏகாதசி" (அ) "அன்னதா ஏகாதசி" (அ) "பத்ரபாத கிருஷ்ண பட்ச ஏகாதசி" { अज एकादशी / अन्नदा एकादशी } ( Aja Ekadasi / Annadha Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது. அஜ / அன்னதா ஏகாதசி பற்றிய பிரம்ம வைவர்த்த புராண விளக்கம்: இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் தமது பூர்வ ஜென்ம பாவங்களின் கர்ம வினைகளில் இருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறு...