அத்தி வரதரின் அரிய தரிசனம்...
காணொளி தொகுப்பு / VIDEO CLIP...
ஆம், கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டார். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லை, எனவே பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
ஹரி ஓம்...
சரி, கோவிலை அடைவது எப்படி .... இதோ Google Map உங்களுக்காக ... (Click on Directions, It will show the route map from your location... [wherever you are in]...)
தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவிலில் "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்" 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கோவில் புஷ்கரணியில் (தெப்பக்குளம்) இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்...
(1st July to 17th August 2019)
ஆம், அப்பேற்பட்ட அரிய நிகழ்வினை பற்றி அறிவோம் சில தகவல்களை ...
காணொளி தொகுப்பு / VIDEO CLIP...
...அத்தி வரதரை பற்றிய காணொளி தொகுப்பு காண இங்கு கிளிக் செய்யவும்...
....Please Click Here to See the Video about Athi Varadhar...
....Please Click Here to See the Video about Athi Varadhar...
"க்ருதா யுகத்தில்" ஸ்ரீ பிரம்ம தேவரால், காஞ்சிபுரத்தில், அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட மூர்த்தியே, "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்" ஆவார். ப்ரம்ம தேவரின் யாகத்தீயினால் பின்னப்பட்ட மூர்த்தியை என்ன செய்வதென்று அறியாத ப்ரம்ம தேவருக்கு, அசரீரி மூலம் வந்த கட்டளையை நிறைவேற்றினார்.
ஆம், கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டார். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லை, எனவே பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
பக்தர்களின் வழிபாட்டிற்காக "பழைய சீவரம்" எனும் இடத்தில் உள்ள பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். "அமிர்த சரஸ்" என்று அழைக்கப்படும் ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரை இறைத்து விட்டு "ஆதி அத்தி வரதரை " வெளியே கொண்டு வருவார்கள்.
கடந்த 1979 ஆம் ஆண்டில் இத்தகைய அரிய நிகழ்வு நடந்தேறிய பொழுது, எந்த ஒரு தகவல் தொடர்பும் மிகப்பெரிய அளவில் இல்லாத கால கட்டத்தில் (தற்பொழுது உள்ளது போல் Whatspp, Facebook இல்லாமல்) 17 இலட்சம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதனை தொடர்ந்து, (40 ஆண்டுகள் நிறைவுற்று) தற்பொழுது 2019 ஆம் ஆண்டு "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்", திருக்கோவில் "புஷ்கரணியில்" இருந்து வெளிவந்து, வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார். (48 நாட்கள்)
(1st July to 17th August 2019)
இந்த முறை, தினசரி 1 லட்சம் முதல் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் செவ்வனே நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது...
இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ஹிந்து சமய ஆன்மிக அமைப்புகளும் , தொண்டு நிறுவனங்களும், மிகப்பெரும் தொழில் ஸ்தாபனங்களும் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செய்து வருகின்றன.
இந்த அரிய நிகழ்விற்காகவே, திருக்கோவிலின் உள்ளே "சத்ய பூர்ணா பவனம்" எனும் வசந்த மண்டபம் கட்டப்பெற்று ஏப்ரல் 20ம் தேதி அதன் திறப்பு விழாவும் இனிதே நிறைவுற்றது.
இந்த முறை சிறப்பு தரிசன கட்டணம் ரூபாய் 50 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது.
கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை அருளும் "ஸ்ரீ அத்தி வரதரை" தரிசிக்க 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவோம்...புண்யம் பெறுவோம்.... ஹரி ஓம்...
இந்த மாபெரும் புண்ய நிகழ்வில், பக்த பெருமக்களுக்கு சேவை செய்வதற்காக (Volunteer Service) நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலம் நாமும் ஒரு குழுவாக செல்ல இருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்...
(Athi Varadhar Dharshan - 1st July to 17th August 2019)
ஹரி ஓம்...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா
திருநெல்வேலி
திருநெல்வேலி
சரி, கோவிலை அடைவது எப்படி .... இதோ Google Map உங்களுக்காக ... (Click on Directions, It will show the route map from your location... [wherever you are in]...)
Comments
Post a Comment