'தை அமாவாசை' மற்றும் 'பத்ர தீப' விளக்கம்: ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் மிகவும் முக்கியமானது என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும். 'சிரார்த்தம்' என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது. இந்த நேரத்தில், காஞ்சி ஸ்ரீ. மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.... எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ??? மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்க