வைகுண்ட ஏகாதசி...18-12-2018
ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ...
ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா ..
திருநெல்வேலி ...
திருநெல்வேலி ...
நாளை (18-12-2018) வைகுண்ட ஏகாதசி...
நாம் பொதுவாகவே மாதந்தோறும் வரும் 2 ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும்.. இது நமது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து அதனை பலப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு...
ஆனால், தற்போதைய "நவீன" (??!!) காலத்தில் அவ்வாறு உபவாசம் இருக்க முடியாதவர்கள் நாளை ஒரு தினம் மாத்திரம் உபவாசம் இருப்பின் மிக, மிக நன்று...
ஏகாதசி விரத மகிமை பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளது...சாதாரணமாக, சாப்பிடும் பொழுது யாரையும் நாம் தடுக்க கூடாது. அது மஹா பாவம் ... ஆனால் ஏகாதசி அன்று மாத்திரம் நாம் ஒருவரை அன்னம் (அரிசி) சாப்பிடகூடாது என்று அறிவுறுத்தினாலோ, அவரை அரிசி சாதம் சாப்பிட விடாமல் செய்தால் கூட அது பாவம் ஆகாது...(முக்கிய குறிப்பு: உடல் நலம் இல்லாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளை எந்தவொரு உபவாசமும் இருக்க சொல்லி வற்புறுத்தல் கூடவே கூடாது...)
விரத முறை:
இன்று (17-12-2018) இரவே, அன்ன உணவை தவிர்க்க வேண்டும்... (பூரி, சப்பாத்தி, அவல் உப்புமா, ரவை உப்புமா சாப்பிடலாம்..)
நாளை (18-12-2018) காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேளைகளிலும் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்து, அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று காலையில் ஒருமுறையும், பின்னர் மாலை சொர்க்க வாசல் திறந்த பின்னர் ஒரு முறையும் பெருமாளை மனமுருக வேண்டி கோவிந்த நாம ஸ்மரணம் செய்வது மஹா புண்யமாகும்...
பின்னர் துவாதசி அன்று (19-12-2018) அதிகாலை அன்னம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியலுடன் உங்களுக்கு ஏற்றவாறு மிக நல்ல சாப்பாடு சாப்பிட்டு உபவாசம் நிறைவு செய்யலாம்...அகத்தி கீரை மற்றும் நெல்லிக்கனி சேர்த்துக்கொள்வது மிக நன்று...
...முழுதாக விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் ???விதி விலக்கு...
தாங்கள் புரியும் பணி காரணமாகவும், உடல் உழைப்பை அதிகம் புரிந்து வேலை செய்பவர்களும் மூன்று வேளைகளும் உபவாசம் இருக்க முடியாதவர்களும்,(வயோதிகர்கள், உடல் நலம் குன்றியவர்கள், சர்க்கரை வியாதி உடையவர்கள்....) வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது, அரிசி உணவை மாத்திரம் கண்டிப்பாக தவிர்த்து, அவல்உப்புமா, ரவை உப்புமா போன்றவற்றை தேவைக்கேற்ப உண்டு நாள் முழுவதும் கோவிந்த நாமத்தை மனதிற்குள்ளாகவே ஜபம் செய்யலாம்...உடல் நலம் உள்ளவர்கள் பழச்சாறு மாத்திரம் அருந்தி உபவாசம் இருக்கலாம்... (தேவைப்பட்டால்...) இதனை தங்கள் உடல் நிலையை பொறுத்து தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்....
இவை அனைத்தும் அறிவியல் பூர்வமாக தற்பொழுது நமது உடலுக்கு மிக நன்மை பயக்கும் விஷயம் என்றும், கேன்சர் செல்களை வளர விடாமல் தடுக்கும் என்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்...
முடிந்தவரை நாளை (18-12-2018) ஒருநாள் மாத்திரம் அன்னம் மற்றும் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்போம்... ஒரு வருட உபவாச பலனை பெறுவோம்...
...ஹரி ஓம்...
...ஓம் நமோ நாராயணாய...
...ஸ்ரீ வெங்கடேசாய நமஹ...
...ஸ்ரீ வெங்கடேசாய நமஹ...
...ஸ்ரீ கோவிந்தாய நமஹ...
இறை சேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
திருநெல்வேலி....
Comments
Post a Comment