வைகுண்ட ஏகாதசி... 18-12-2018 ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... தாமிரா தர்ம ரக்ஷண ஸபா .. திருநெல்வேலி ... நாளை (18-12-2018) வைகுண்ட ஏகாதசி... நாம் பொதுவாகவே மாதந்தோறும் வரும் 2 ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும்.. இது நமது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து அதனை பலப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு... ஆனால், தற்போதைய "நவீன" (??!!) காலத்தில் அவ்வாறு உபவாசம் இருக்க முடியாதவர்கள் நாளை ஒரு தினம் மாத்திரம் உபவாசம் இருப்பின் மிக, மிக நன்று... ஏகாதசி விரத மகிமை பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளது...சாதாரணமாக, சாப்பிடும் பொழுது யாரையும் நாம் தடுக்க கூடாது. அது மஹா பாவம் ... ஆனால் ஏகாதசி அன்று மாத்திரம் நாம் ஒருவரை அன்னம் (அரிசி) சாப்பிடகூடாது என்று அறிவுறுத்தினாலோ, அவரை அரிசி சாதம் சாப்பிட விடாமல் செய்தால் கூட அது பாவம் ஆகாது...(முக்கிய குறிப்பு: உடல் நலம் இல்லாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளை எந்தவொரு உபவாசமும் இருக்க சொல்லி வற்புறுத்தல் கூடவே கூடாது...) விரத முறை:...