நவ திருப்பதி ஸ்தலங்கள்... ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், மேலும், திருநெல்வேலியில் "புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும் நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்... வெளியூரில் உள்ள பல அன்பர்கள், " தாம்ரபர்ணீ மஹா புஷ்கரத்திற்கு" புனித நீராட வரும் பொழுது அதனுடன் இணைத்து நமது நெல்லை மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி மற்றும் நவ கைலாயம் போன்ற ஸ்தலங்கள் சென்று வருவது பற்றிய விவரங்களை தொடர்ந்து தொலைபேசியில் கேட்ட வண்ணம் உள்ளனர்... அவர்கள் அத்தனை பேரின் ஆர்வத்திற்கும் நன்றி. எல்லோரும் பயன் பெறும் வகையில், எளிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது... நவ திருப்பதி ஸ்தலங்கள் திறந்து இருக்கும் நேரம், அங்குள்ள மூலவர் மற்றும் தாயார் திருநாமங்கள் நவ திருப்பதி செல்ல மைய ஸ்தலமான "ஸ்ரீ வைகுண்டத்தில்" இருந்து மற்ற ஸ்தலங்களுக்கு செல்ல ஆகும் தூரம் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளது... மேலும், எப்பொழுதும் சிறப்பா...