Skip to main content

Posts

Showing posts from August, 2018

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018 - Thaamrabarnee Maha Pushkaram 2018

"தாம்ரபர் ணீ மஹா  புஷ்கரம்" - பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா ??? இதற்கு முந்தைய பதிவுகளில் "தாம்ரபர்ணீ" நதியின் பெருமைகளை  பற்றி வரிசையாக பார்த்தோம்... இப்பொழுது வெகு விமரிசையாக பேசப்பட்டு வரும் "புஷ்கரம்" என்றால் என்னவென்று பார்ப்போம்... ஆற்றுப் பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்: பிரம்மாவை எண்ணி தியானம் செய்தார் பிரஹஸ்பதி என்கிற வியாழகுரு . அவர் எதிரில் போய் பிரம்மா நிற்க , பிரம்ம கமண்டலம் தனக்கு வேண்டும் என்று யாசித்தார் அந்தப் பெருங்கிரஹத்தார் . தியானம் , தவம் ஆகியவற்றை முறையாகச் செய்து முறையாக யாசித்தால் , கேட்டதைக் கொடுப்பதில் என்ன தடை ? அதுவும் மண்ணால் ஆன கமண்டலம்தானே , கொடுத்துவிட்டால் போயிற்று ! வியாழகுருவோ , கோள்களில் மிக நல்லவர் என்று பெயர் வாங்கியவரும்கூட ; ஆகவே அவருக்குத் தருவதில் தவறில்லை என்று கருதிய பிரம்மா , கமண்டலத்தைக் கொடுத்துவிட்டார் . தம் கையில் கமண்டலத்தைப் பிடித்து பிரம்மா நீட்ட , பெற்றுக் கொள்வதற்கு வியாழன் முயல ... கமண்டலமோ கைவிட்டு அகல மறுத்தது . மண் கமண

"தாம்ரபர்ணீ " தோன்றியது எப்படி ? அறியாத அரிய தகவல்...

"தாம்ரபர்ணீ  "  யின் வரலாறு  : சிவ - பார்வதி திருமண வைபவத்தை தரிசிக்க , ரிஷிகளும் , முனிவர்களும் , முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலை மலைக்கு வந்ததால் , உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது . உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது , உமையவள் அகத்தியரிடம் , தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க , அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார் . ஆனால் , உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா ..??? இல்லை .... பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி , அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன ! அந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன ..? சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ , இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர் . அதனால் , மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம் , ' வேண்டும் வரம் கேளுங்கள் ’