"தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" - பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா ???
இதற்கு முந்தைய பதிவுகளில் "தாம்ரபர்ணீ" நதியின் பெருமைகளை பற்றி வரிசையாக பார்த்தோம்... இப்பொழுது வெகு விமரிசையாக பேசப்பட்டு வரும் "புஷ்கரம்" என்றால் என்னவென்று பார்ப்போம்...
ஆற்றுப்
பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்:
பிரம்மாவை
எண்ணி தியானம் செய்தார் பிரஹஸ்பதி
என்கிற வியாழகுரு. அவர் எதிரில் போய்
பிரம்மா நிற்க, பிரம்ம கமண்டலம்
தனக்கு வேண்டும் என்று யாசித்தார் அந்தப்
பெருங்கிரஹத்தார். தியானம், தவம் ஆகியவற்றை முறையாகச்
செய்து முறையாக யாசித்தால், கேட்டதைக்
கொடுப்பதில் என்ன தடை? அதுவும்
மண்ணால் ஆன கமண்டலம்தானே, கொடுத்துவிட்டால்
போயிற்று! வியாழகுருவோ, கோள்களில் மிக நல்லவர் என்று
பெயர் வாங்கியவரும்கூட; ஆகவே அவருக்குத் தருவதில்
தவறில்லை என்று கருதிய பிரம்மா,
கமண்டலத்தைக் கொடுத்துவிட்டார்.
தம் கையில் கமண்டலத்தைப் பிடித்து
பிரம்மா நீட்ட, பெற்றுக் கொள்வதற்கு
வியாழன் முயல... கமண்டலமோ கைவிட்டு
அகல மறுத்தது. மண் கமண்டலம் ஏன்
மறுக்கிறது?
கமண்டலத்திற்கு
உள்ளே... ஒருவர் அமர்ந்திருக்கிறார். தன்னையே
சுருக்கிக்கொண்டு, கமண்டலத்தின் வளைவு நெளிவுகளுக்குள் சுருண்டு
புரண்டு ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்தாம்,
தாமும் நகர மறுத்து கமண்டலத்தையும்
கட்டிவிட்டார். யார் அவர்????
வருணதேவனுக்கு
மகன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் "புஷ்கரன்" என்று பெயர். ("புஷ்கரன்'
- புஷ்= புஷ்டி, கரன்= செய்பவன்;
அதாவது, புஷ்டியை, போஷாக்கைத் தருபவன் என்று பொருள்.
மழைக் கடவுளான வருணன் தானே, தன்னுடைய
பலனாக, ஊட்டத்தை, சக்தியை, புஷ்டியைத் தரவேண்டும்! அதைக் காட்டத்தான், அவனுடைய
மகனுக்கு இப்படியொரு பெயர் போலும்!) இளமைப்
பருவம் எய்தியதும், தவ வாழ்க்கை மேற்கொண்டான்
புஷ்கரன். அவன் தவத்தை மெச்சி
பிரம்மா எதிர்நின்றதும், "நதிகளையும் நீர்ப்பரப்புகளையும் எப்போதும் தூய்மை செய்பவனாகத் தான்
இருக்கவேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிரந்தர
அவா' என்றும் வேண்டினான்.
பிறர் மீது
தன் அழுக்கைச் சுமத்த நினைக்காமல், பிறர்
அழுக்கைத் தான் ஏற்றுத் துடைக்கவேண்டும்
என்று எண்ணுவது எவ்வளவு உத்தமம்! புஷ்கரன்
நதிகளில் பிரவேசிக்கும் போதெல்லாம், அந்தந்த நதிகள் கூடுதல்
புனிதம் பெறும் என்ற வரத்தை
நல்கிய பிரம்மா, சிருஷ்டியின் தூய்மை காக்கப்படவேண்டும் என்பதற்காகப்
புஷ்கரனைத் தம்முடைய கமண்டலத்திலேயே தங்கியிருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இப்போது
வந்தது சிக்கல்! பிரம்ம கமண்டலத்தில் வீற்றிருந்த
புஷ்கரன், வியாழனோடு போக மறுத்தார். காரணம்?
கமண்டலத்தை வியாழன் விழைந்த சுயநலம்.
ஆமாம், வியாழகுரு நல்லவர் தாம்; கோள்களிலேயே சுபகிரஹம் என்று பெயர் வாங்கியவர்;
குரு பார்வை கோடி நன்மை
என்று போற்றப்படுபவர். ஆனாலும், அவருக்குச் சற்றே பேராசை. புஷ்கரனை
உள்ளடக்கிய பிரம்ம கமண்டலம் தன்னிடத்தில்
இருந்தால், எல்லா நன்மைகளுக்கும் தாமே
அதிபதியாகி, அசுபங்களைத் துடைக்கும் பெருமிதத்தையும் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும்
என்கிற ஆசை; இதை வைத்து
தமக்கே முதல் நிலை கிடைத்து,
எல்லோரும் தம்மையே பாராட்டவேண்டும் என்கிற
பேராசை....
அழுக்குகளை நீக்கும் ஆற்றலைப் பெற்றவராயிற்றே புஷ்கரன், வியாழ குருவின் அகந்தை அழுக்கை அறியமாட்டாரா
என்ன?? புஷ்கரனின் புனிதச் சிந்தனையை உணர்ந்த
பிரம்மா, புஷ்கரனுக்கும் வியாழனுக்கும் மட்டுமல்லாமல், மானுடம் அனைத்துக்கும் பயன்
தரும் அற்புத வழியைக் கண்டுபிடித்தார்....
வியாழகுரு,
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் புகுகிற
காலகட்டத்தில் மட்டும், கமண்டலம் அவர் கையில் இருக்கும்
என்று வரம் கொடுத்துவிட்டார்.
அதன்படி,
ஒரு ராசிக்குள் வியாழகுரு பிரவேசிக்கிற முதல் 12 நாட்களும், அந்த ராசியை விட்டு
வெளியேறுகிற (அடுத்த ராசிக்குள் பிரவேசிப்பதற்கு
முன்னதாக) கடைசி 12 நாட்களும், பிரம்மகமண்டலம் வியாழகுருவின் கையில் இருக்கும்.
ராசிக்குள்
பிரவேசித்து சஞ்சரிக்கும் வியாழன், அந்தந்த ராசிக்கு உரித்தான
புனித நதியிலேயும் அந்தந்தக் காலகட்டத்தில் தங்குகிறார்.
புனித நீராடித் திருக்கோயிலுக்குள் நுழைகிறோம் இல்லையா? அதுபோல, குறிப்பிட்ட ராசியின்
குறிப்பிட்ட நதியில், பிரம்ம கமண்டலத்தைக் கையில் ஏந்தியபடியே புனித
தீர்த்தமாடி, அந்தக் குறிப்பிட்ட ராசிக்குள்
வியாழகுரு பிரவேசிக்கிறார்.
அந்த சமயத்தில், கமண்டலத்தைவிட்டு
வெளி வந்து, வியாழனுடைய கையைப்
பற்றிக் கொண்டுத் தாமும் நதியில் இறங்குகிறார் "புஷ்கரன்". இதனால், அந்த நதியானது,
பலமடங்கு புனிதம் அடைவதோடு, அந்த
சமயத்தில் அதில் நீராடும் ஜீவர்களின்
மாசுகளும் பாவங்களும் அகற்றப்படுகின்றன. இந்தக் கோலாகலத்தைக் காண்பதோடு,
தாங்களும் புனிதம் சேர்த்துக் கொள்வதற்காக,
தேவர்களும் ரிஷிகளும்கூட அந்த நதியில் நீராடி,
அதன் கரைகளில் தங்குகிறார்கள்.
இவ்வாறு,
குருவாலும் புஷ்கரனாலும் புனிதம் கூட்டப்பெறுகின்ற நிகழ்வே,
"ஆற்றுப் புஷ்கரம்' (நதிப் புஷ்கரம்) ஆகின்றது.
தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரம் எப்பொழுது ?
தாம்ரபர்ணீ
மஹாபுஷ்கரம் 2018 நிகழும்
ஸ்ரீவிளம்பி ஆண்டு, புரட்டாசி 25ஆம்
நாள், அதாவது அக்டோபர் மாதம்
11ஆம் தேதி (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி), வியாழகுரு (துலா ராசியில் இருந்து)
விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். விருச்சிக ராசிக்கான நதி தேவதை, "தாம்ரபர்ணீ" ஆவாள். (தாம்ரபர்ணீ விசாக நட்சத்திரத்தில், விருச்சிக ராசியில் தோன்றியவள் அல்லவா ? )
அக்டோபர் 11 பூர்வாங்க பூஜைகள் "பாபநாசத்தில்" ஆரம்பித்து 12 முதல் 23 வரை "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" அனைத்து தீர்த்த கட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று 24 அன்று தீர்த்தவாரி பூஜைகளோடு "முறப்ப நாடு" குரு ஸ்தலத்தில் நிறைவு பெற இருக்கின்றது...
ஆகவே 2018 அக்டோபர் 11ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது...
குறிப்பிட்ட
ராசியில் குரு சஞ்சரிக்கும் ஓராண்டுக்
காலம் முழுவதுமே, குறிப்பிட்ட நதியிலும் தங்குகிறார். இந்த
வகையில், 2019ம் ஆண்டு நவம்பர் 4ஆம்
தேதிவரை தாம்ரபர்ணீத் தாய் சிறப்படைகிறாள் என்றாலும்,
குரு பிரவேசிக்கும் முதல் பத்து நாட்கள் "ஆதி
புஷ்கரம்' என்றும், குரு அகலும் பத்து
நாட்கள் "அந்த்ய புஷ்கரம்' என்றும்
பெருமை கொள்கின்றன.
வியாழகுருவானவர்,
குறிப்பிட்ட ஒரு ராசிக்குள் பிரவேசித்து
சஞ்சாரம் செய்வது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.. இப்போது
விருச்சிக ராசிக்குள்ளும் தாம்ரபர்ணீக்குள்ளும் சஞ்சரிக்கப் புகுகிற வியாழன், இன்னும்
12 ஆண்டுகளுக்குப் பின்னரே, மீண்டும் இங்கு வருவார்...
இது மட்டுமின்றி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, (12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை = 12 x 12 வருடங்கள் = 144 வருடங்கள் ) இவ்வகையில், வியாழ குரு மீண்டும் விருச்சிகத்திற்கு வருவதும், 12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை வரும் மஹா புஷ்கரம் மீண்டும் "தாம்ரபர்ணி" நதிக்கரையில் நடப்பதற்கும் 144 ஆண்டுகள் ஆகும்...
ஆகவே, இது மஹாபுஷ்கரம் ஆகிறது...
இது மட்டுமின்றி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, (12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை = 12 x 12 வருடங்கள் = 144 வருடங்கள் ) இவ்வகையில், வியாழ குரு மீண்டும் விருச்சிகத்திற்கு வருவதும், 12 புஷ்கரங்களுக்கு ஒரு முறை வரும் மஹா புஷ்கரம் மீண்டும் "தாம்ரபர்ணி" நதிக்கரையில் நடப்பதற்கும் 144 ஆண்டுகள் ஆகும்...
ஆகவே, இது மஹாபுஷ்கரம் ஆகிறது...
எனவே, உண்மையிலேயே இது தான் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு அல்லவா ?...
நமது மற்றும் அடுத்த மூன்று தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்காத ஒரு மாபெரும் வாய்ப்பு இது ... மீண்டும் இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்குமா ?
இந்த ஜென்மாவில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் அல்லவா இது ?
எனவே, உங்கள் மஹா புஷ்கர் பயணத்தை இன்றே உறுதி செய்து கொள்ளுங்கள்....
இப்பேற்பட்ட மஹா புஷ்கர் நிகழ்வில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் நதி தீர்த்த கட்டங்கள் எவ்வாறு பிரிக்க பட்டுள்ளது என்பதையும் இனி வரும் பதிவுகளில் காண்போம்....
தாம்ரபரணீ மாதா கி ஜெய் ....
ஓம் நம ஷிவாய ....
Very good. Worth reading..
ReplyDeleteWorth reading.
ReplyDelete