"தாம்ரபர் ணீ மஹா புஷ்கரம்" - பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா ??? இதற்கு முந்தைய பதிவுகளில் "தாம்ரபர்ணீ" நதியின் பெருமைகளை பற்றி வரிசையாக பார்த்தோம்... இப்பொழுது வெகு விமரிசையாக பேசப்பட்டு வரும் "புஷ்கரம்" என்றால் என்னவென்று பார்ப்போம்... ஆற்றுப் பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்: பிரம்மாவை எண்ணி தியானம் செய்தார் பிரஹஸ்பதி என்கிற வியாழகுரு . அவர் எதிரில் போய் பிரம்மா நிற்க , பிரம்ம கமண்டலம் தனக்கு வேண்டும் என்று யாசித்தார் அந்தப் பெருங்கிரஹத்தார் . தியானம் , தவம் ஆகியவற்றை முறையாகச் செய்து முறையாக யாசித்தால் , கேட்டதைக் கொடுப்பதில் என்ன தடை ? அதுவும் மண்ணால் ஆன கமண்டலம்தானே , கொடுத்துவிட்டால் போயிற்று ! வியாழகுருவோ , கோள்களில் மிக நல்லவர் என்று பெயர் வாங்கியவரும்கூட ; ஆகவே அவருக்குத் தருவதில் தவறில்லை என்று கருதிய பிரம்மா , கமண்டலத்தைக் கொடுத்துவிட்டார் . தம் கையில் கமண்டலத்தைப் பிடித்து பிரம்மா நீட்ட , பெற்றுக் கொள்வதற்கு வியாழன் முயல ... கமண்டலமோ கைவிட்டு அகல மறுத்தது . மண் கமண...