தாமிரபரணி மஹாத்மியம் - 003
நன்றி:
சிறியவன்
எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்...
சிறியவன்
எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்...
தாமிரபரணி மஹாத்மியம் - 003
நதிகளின் பெருமைகள்:
- முருகருக்கும், பீஷ்மருக்கும் காங்கேயன் என்று பெயர். இவர்கள் கங்கையில் தோன்றியவர்கள்.
- சரயூ நதிக்கரையில் தோன்றியவர் ராமர்.
- யமுனா நதிக்கரையில் அவதரித்தவர் கிருஷ்ணர்.
- ஆதிசங்கரர் பூர்ணா நதிக்கரையில் பிறந்தார்.
- ராமாயணத்தை தோற்றுவித்தது தமசா நதி.
- இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் தாமிரபரணி மகாநதி என்று வருணிக்கப்பட்டுள்ளது.
- எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும், தவளைகளையும் உண்டாக்குகின்றன. ஆனால் தாமிரபரணிதேவி சமுத்திரத்தில் கலந்து மணியையும், முத்துக்களையும் படைக்கின்றாள் என்று திரு நீலகண்ட தீட்சிதர் கூறுகிறார்.
- தாமிரபரணி சமுத்திரத்திற்கு ரத்னாகரம் என்று பெயர் சூட்டுகிறாள்.
- வியாச முனிவர் சரஸ்வதி நதிக்கரையில் நாத முனிவரால் தூண்டப்பெற்று ஸ்ரீமத் பாகவத்தை எழுதினார்.
- திருவள்ளுவர், ஔவையார், நம்மாழ்வார், சிவஞானமுனிவர், சிவானந்தா, பனம் பாரனார், திரிகூடராசப்பக் கவிராயர், வீரபாண்டியன், பரிமேல் அழகர், குலசேகர ஆழ்வார், சேனா வரையர் ஆகியோரை தோற்றுவித்ததும் தாமிரபரணி தானே! கவிச்சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியாரும் நதிக்கரையில் அவதரித்தவர்கள் தானே!
- அத்திரி மலையில் அத்திரி மா முனிவர் தவம் செய்த அத்திமரம் இன்னமும் உள்ளது.
- சமுத்திரத்தில் பல நதிகள் அடங்கி உள்ளன. தாமிரபரணியில் அம்பா சமுத்திரம், கோபால சமுத்திரம், நீலகண்ட சமுத்திரம் (பாலாமடை) போன்ற சமுத்திரங்கள் அடங்கி உள்ளன.
- அகத்திய முனிவரும், சங்க முனிவரும் இன்றும் சூட்சும உருவில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர்.
தாமிரபரணியின் அணைக்கட்டுகளும்,
பாசனங்களும்:
பழங்கால மன்னர்களால்
தாமிரபரணியின்
குறுக்கே
பாபநாசம்,
சேர்வலாறு,
மணிமுத்தாறு,
கடனா,
ராமநதி,
கருப்பா
நதி,
குண்டாறு
ஆகிய
ஏழு
அணைக்கட்டுகள்
கட்டப்பட்டுள்ளன.
நம்
முன்னோர்களின்
பொறியியல்
வடிவமைப்பு
மற்றும்
கட்டிடத்
தேர்ச்சிக்கு
இந்த
அணைகள்
எல்லாம்
மிகச்
சிறந்த
எடுத்துக்காட்டாகும்.
கடைசியாக
ஆங்கிலேயர்
ஆட்சி
காலத்தில்
ஸ்ரீவைகுண்டத்தில்
ஒரு
தடுப்பணை
கட்டப்பட்டுள்ளது.
ஆக
தாமிரபரணியின்
குறுக்கே
8 அணைகள்
உள்ளன.
திருநெல்வேலி,
தூத்துக்குடி,
விருதுநகர்
மாவட்டங்களின்
குடிநீர்
ஆதாரமே
தாமிரபரணி
தான்.
தாமிரபரணி
ஆற்றின்
நீளம்
திருநெல்வேலி
மாவட்டத்தில்
80கி.மீ யும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40கி.மீ யும் ஆக மொத்தம் 120 கிலோமீட்டர் பாய்கிறது. பாசனம் உள்ள குளங்கள் மற்றும் பாசனம் இல்லாத குளங்கள் என மொத்தம் 3150 குளங்கள் உள்ளன. நதியின் குறுக்கே 105 பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அணைக்கட்டுகள் உள்ளன. சுமார் 87,815 ஹெக்டேர் நிலங்கள் நேரடி பாசனங்களாகவும், சுமார் 1,50,000 ஹெக்டேர் நிலங்கள் மறைமுக பாசனங்களாகவும்
பயன்
பெறுகின்றன.
பாபநாசம், மணிமுத்தாறு,
குற்றாலம்,
மூணாற்று
முக்கு(தாமிர சாகர சங்கம தீர்த்தம்) போன்ற பல சுற்றுலா தலங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட், ஸ்பிக், DCW, அனல் மின் நிலையம், அணுசக்தித் துறையின் கனல் நீர் ஆலை ஆகியவற்றிற்கு தாமிரபரணி நீர் பயன்படுத்தப் படுகிறது.
இப்படி பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தாம்ரபர்ணி நதியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் "மஹா புஷ்கரம்" மிக விமரிசையாகவும், கோலாகலத்துடனும் வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப் பட உள்ளது...
"புஷ்கரம்" என்றால் என்ன, அதன் சிறப்புகள் என்ன, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நமது அடுத்த பதிவுகளில் காண்போம்...
ஓம் நம ஷிவாய !!!
Comments
Post a Comment