கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?
தாமிரபரணி மஹாத்மியம் - 002
தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற நமது முந்தைய பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....
நன்றி:
சிறியவன்
எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்...
தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட்
தாமிரபரணி மஹாத்மியம் - 002
நதிகளுக்கெல்லாம்
மூத்தது தாமிரபரணி :
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் "பொருநல்" என்றும், சேக்கிழார் ஆற்றிய பெரியபுராணத்தில் "தன்பொருத்தப் புணல்நாடு" என்றும், முக்கூடல் பள்ளு எனும் சிற்றிலக்கியத்திலும், கலிங்கத்து பரணியிலும், பரஞ்சோதி முனிவர் ஆக்கிய திருவிளையாடற்புராணத்திலும், குமர குருபர அடிகள் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிலும் தாமிரபரணியைப் பற்றி வர்ணிக்கப் பட்டுள்ளது.
தாமிரபரணி பகுதிகளைப் பற்றி மகாபாரதம், ரகுவம்சத்திலும் கூறப்பட்டுள்ளது. பூர்வ கிரேக்கர்கள், ரோமானியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், சீனர்கள், அரேபியர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்துள்ளனர்.
கம்ப இராமாயணத்தில் கிஷ்கிந்தா மன்னர் சுக்ரீவன் சீதையைத் தேட நான்கு எல்லைக்கும் அனுப்புகிறார். தெற்கு நோக்கி போகும் படையில் அனுமன் இருந்தார். இராமர் அனுமனை நோக்கி "நீ எந்த வேலைக்கு அனுப்பப் படுகிறாய் என்பதை நன்கு உணர்வாய்.... "நீ செல்லும் வழியிலே பொருணை ஆறு (தாமிரபரணி) தோன்றும். பொதிகை மலை பக்கம் போகாதே! அங்கு அகத்தியர் நடத்தும் தமிழ்ச்சங்கம் இருக்கின்றது. நீ அங்கே போனால் தமிழின் சுவையிலே உன் நெஞ்சைப் பறிகொடுத்து விடுவாய். கவனம்." என்கிறார் என்றால், இதன் மூலம் "தாமிரபரணி மற்றும் தமிழ் இரண்டின் பெருமையையும் நாம் உணரலாம்" ...
தாமிரபரணி மஹாத்மியம் - 002
தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற நமது முந்தைய பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....
நன்றி:
சிறியவன்
எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்...
தாமிரபரணி மஹாத்மியம் - 002
தாமிரபரணியின்
பெருமைகள்:
தாமிரபரணியின் புகழை விளக்கும் "தாமிர மகாத்மியம்" என்கிற ஓலைச்சுவடி உள்ளது. இராமாயணம், மகாபாரதம் போன்று இதுவும் ஒரு இதிகாசம். ராம, கிருஷ்ண அவதாரங்களை விட முக்கியமான "கல்கி அவதாரம்" தாமிரபரணிக் கரையில் ஏற்படப் போகிறது என்று ஸ்ரீ மத் பாகவதம் கூறுகிறது.
தாமிர மகாத்மிய ஓலைச்சுவடி சமஸ்கிருதத்தில் உள்ளது. உத்தர காண்டத்தில் ராமரின் உத்தரவை மீறிய லட்சுமணனுக்கு என்ன பிராயச்சித்தம்? என்ன தண்டனை கிடைத்தது? என்பதை தாமிர மகாத்மியம் விளக்குகிறது.
தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகளும், நவ கைலாயங்களும், மேற்கே பார்த்த சிவாலயங்களும் அமைந்துள்ளது. சேர சோழ பாண்டீஸ்வரர் ஆலயம்
திருக்கோளூரில்
உள்ளது.
இங்கு
தான்
குபேரர்
இழந்த
தன்
செல்வத்தை
மீண்டும்
அடைந்தார்.
பிரம்மாவுக்கு சிருஷ்டி சாமர்த்தியமும், ருத்திரனுக்கு சர்வக் ஞதா பிராத்தியம், வருணனுக்கு ஜலேசத்வ பதவியும், அஷ்டதிக் பாலகர்களுக்கு ஐஸ்வர்ய பதவியும், சோமனுக்கு சயரோக நாசமும், குபேரனுக்கு ராஜ ராஜ பதவியும், நந்திகேசுவரரின் பிறப்பும், கபிலரின் பிறப்பும், சனகரின் பிறப்பும் தாமிரபரணியில் தவம் செய்ததால் ஏற்பட்ட பெருமைகள்.
வேதங்களைத் தொகுத்தவர் ஸ்ரீ வியாசர். கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் இவற்றிற்கு உரை எழுதியவர் இவர். இதைச் செய்யும் முன் பிரம்மனை வழிபடுகிறார். பிரம்மா நாதம்புஜத்தில் தவம் செய்யச் செல்கிறார். அந்த இடம் தான் "சேரன் மகாதேவி". தாமிரபரணியை அம்பாளாகவே வழிபடுகிறார். தவம் செய்யும் போது ஒரு நாள் தாமிரபரணியில் பிராகசமான தாமரை ஒன்று தென்பட்டது. தாமரை மேலே அன்னப்பறவை இருந்தது. அன்னப் பறவை இவருக்கு ஞான உபதேசம் கொடுத்ததால் ஞானோதயம் உண்டாயிற்று.
ஸ்ரீ தாமிரபரணியின் உபாசனை ஸ்த்ரீ(பெண்) ஹத்தியையும் மஹா பாதகங்களையும், மஹா பாவங்களையும், மாத்ரு(தாய் வழி) ஹத்தியையும், பித்ருக்கள்(தந்தை வழி) சாபமும் விலக வழி செய்கிறது.
தாமிரபரணி மூலமாக பகன் இழந்த கண்களைப் பெற்றார். தாமிரபரணியில்
தவமிருந்து
மானாசாக்கள்
நோயையும்,
பாணாதை
பைசாசத்(பிசாசு) தன்மையையும்,
துர்வாச
முனிவர்
சாபத்தையும்,
சரஸ்வதி
தேவி
தன்
சாபத்தையும்
போக்கிக்
கொண்டார்கள்.
கி.பி.80ல் பெரிபுளூசு நூலாசிரியரும், கி.பி.150ல் தாலமியும், கி.மு.302ல் மேலை நாட்டு மெகஸ்தனீசும், அசோகச் சக்கரவர்த்தி கி.மு.273-232ல் தன் கல்வெட்டிலும் தாம்பபன்னி என்று தாமிரபரணியைக் குறிப்பிட்டுள்ளனர்
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் "பொருநல்" என்றும், சேக்கிழார் ஆற்றிய பெரியபுராணத்தில் "தன்பொருத்தப் புணல்நாடு" என்றும், முக்கூடல் பள்ளு எனும் சிற்றிலக்கியத்திலும், கலிங்கத்து பரணியிலும், பரஞ்சோதி முனிவர் ஆக்கிய திருவிளையாடற்புராணத்திலும், குமர குருபர அடிகள் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிலும் தாமிரபரணியைப் பற்றி வர்ணிக்கப் பட்டுள்ளது.
தாமிரபரணி பகுதிகளைப் பற்றி மகாபாரதம், ரகுவம்சத்திலும் கூறப்பட்டுள்ளது. பூர்வ கிரேக்கர்கள், ரோமானியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், சீனர்கள், அரேபியர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்துள்ளனர்.
காயல், கொற்கை, கபாடபுரம், மணலூர், மணிபுரம் பற்றி ரோம, யவனர் சரித்திரங்களில் தெரிகிறது.
கம்ப இராமாயணத்தில் கிஷ்கிந்தா மன்னர் சுக்ரீவன் சீதையைத் தேட நான்கு எல்லைக்கும் அனுப்புகிறார். தெற்கு நோக்கி போகும் படையில் அனுமன் இருந்தார். இராமர் அனுமனை நோக்கி "நீ எந்த வேலைக்கு அனுப்பப் படுகிறாய் என்பதை நன்கு உணர்வாய்.... "நீ செல்லும் வழியிலே பொருணை ஆறு (தாமிரபரணி) தோன்றும். பொதிகை மலை பக்கம் போகாதே! அங்கு அகத்தியர் நடத்தும் தமிழ்ச்சங்கம் இருக்கின்றது. நீ அங்கே போனால் தமிழின் சுவையிலே உன் நெஞ்சைப் பறிகொடுத்து விடுவாய். கவனம்." என்கிறார் என்றால், இதன் மூலம் "தாமிரபரணி மற்றும் தமிழ் இரண்டின் பெருமையையும் நாம் உணரலாம்" ...
"தாமிரபரணியின்" பெருமைகள் தொடர்ந்து பாயும் .... (அடுத்த பதிவு )
ஓம் நம ஷிவாய !!!
Comments
Post a Comment