கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?
தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட்
தாமிரபரணி மஹாத்மியம் - 001
உலகின் பல மூலைகளில் இருந்தும் வந்து அன்பர்கள் கங்கை நதியில் நீராடி தமது பாவத்தை போக்கி கொள்வதாக ஐதீகம். ஹிந்துவாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தனது வாழ்வில் ஒரு முறையேனும் புண்ய ஸ்தலமான காசி மற்றும் திருக்கயிலாய யாத்திரை செய்ய வேண்டும் என்பது ஹிந்துவின் கடமையாக உள்ளது.
எனவே, எல்லோரும் வாழ்வில் ஒரு முறையேனும் கங்கைக்கு சென்று நீராடி தமது பாவத்தை குறைத்து கொள்கிறார்கள்.. ஆனால், இப்படி பல்வேறு தரப்பினரது பாவத்தை சுமக்கும் கங்கை தன்னை எப்படி மீண்டும் தூய்மை படுத்தி கொள்கிறாள் என்ற ஒரு கேள்விக்கு விடை தேடும் பொழுது தான் "தென் இந்தியாவின் கடைக்கோடியில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில்" உள்ள "தாமிரபரணி" நதியின் சிறப்பை அறிய முடிந்தது...
"தாமிரபரணி" நதியினை பற்றி படிக்க, படிக்க அதன் தொன்மையான வரலாறு, பல்வேறு இதிகாசங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அதனை பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது...
எனவே, அப்படிப்பட்ட "தாமிரபரணி" நதியின் பெருமைகளை தொடர்ச்சியாக நமது "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளத்தில் எழுத முடிவு செய்து இந்த "தாமிரபரணி மஹாத்மியம்" தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...
நன்றி:
சிறியவன்
எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்...
சிறியவன்
எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்...
தாமிரபரணி மஹாத்மியம் - 001
காசி புனிதமானது. ஏன்?
கங்கை நதி காசியில் உத்தரவாகிணியாக (வடக்கு நோக்கி) பாய்வதாலேயே காசி புனிதம் அடைகிறது. அதனால் கங்கை புனிதமாகப் போற்றப் படுகிறது.
தாமிரபரணியின்
உத்தரவாகிணிகள்...
தாமிரபரணியின் உத்தரவாகிணியாக (வடக்கு நோக்கி) பாண தீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்து பூந்துறை ஆகிய இடங்களில் பாய்ந்து செல்கிறது.
ஒரு இடத்தில் உத்திரவாகிணியாக செல்லும் காசியை (கங்கை) வெகு தூரம் போய் போற்றுகிறோம். அனந்த காசி, பரம பாவனம், மாலா தாதா, தட்சண கங்கை என்ற பெயர்களைப் பெற்ற இதிகாச சிறப்புடைய தாமிரபரணியை பாண தீர்த்தம், பாபநாசம்,
திருப்புடை
மருதூர்,
சிந்து
பூந்துறை
சென்று
போற்றுகிறோமா?
கங்கையின் பாவத்தைப் போக்கும் தாமிரபரணி...
தாமிரபரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம். யம கீதையும், ஹயக்ரீவ துதியும், அகத்திய தோத்திரமும், கங்கா துதியும், பிரம்மச்சாரி துதியும், வேத வியாச துதியும், கசாவதீ ஜபமும், விசுவே தேவர்கள் துதியும், கெளதம துதியும், கபிலவாசுதேவ துதியும் தாமிரபரணியின் பெருமைகளை உயர்த்தியுள்ளன. "தாமிர மகாத்மியம்" என்னும் ஓர் பழம்பெரும் ஓலைச்சுவடியில்...
"கங்கை தன் பாவத்தை போக்கிக் கொள்ள ஸ்நானம் செய்ய வரும் தாமிர சாகர சங்கம தீர்த்தம்"
என்று தாமிரபரணியின் புனிதம் போற்றப்பட்டுள்ளது.
கங்கையில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள், தங்களிடம் மகாபாவிகள் ஸ்நானம் செய்து விட்டுச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்ள வருடா வருடம் தாமிரபரணிக்கு வந்து ஸ்நானம் செய்ய வருவதாக இச்சுவடி கூறுகிறது.
தாமிர சாகர சங்கமம் :
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய எத்தனையோ தீர்த்த கட்டங்கள் உள்ளன. ஆனால் உலகில் எங்குமே இல்லாத ஈடு இணையற்ற தாமிரசாகர சங்கம தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நமக்கும், நம் முன்னோர்களுக்கும் எல்லையற்ற புண்ணியம் உண்டாக்கும். தாமிரசாகர சங்கமம், தாமிரபரணி, சாவித்ரி, சரஸ்வதி நதிகள் இணைந்து கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஸ்நானம் செய்வதன் மூலம் அனைத்து பாவங்களுக்கும் பரிகாரம் நிச்சயம்…
திருச்செந்தூரிலிருந்து பழைய காயல் அருகே தாமிர சாகர சங்கம தீர்த்தம் உள்ளது. இங்கு ஒரு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. படகில் தான் இவ்விடத்திற்கு செல்ல முடியும்.
தாமிரபரணி தொடர்ந்து பாயும்...(அடுத்த பதிவு)
தாமிரபரணி மஹாத்மியம் - பாகம் 2-ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
தாமிரபரணி மஹாத்மியம் - பாகம் 2-ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
ஓம் நம ஷிவாய !!!
Wonderful information... very new to me. thank you .
ReplyDelete