கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? உலகின் பல மூலைகளில் இருந்தும் வந்து அன்பர்கள் கங்கை நதியில் நீராடி தமது பாவத்தை போக்கி கொள்வதாக ஐதீகம். ஹிந்துவாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தனது வாழ்வில் ஒரு முறையேனும் புண்ய ஸ்தலமான காசி மற்றும் திருக்கயிலாய யாத்திரை செய்ய வேண்டும் என்பது ஹிந்துவின் கடமையாக உள்ளது. எனவே, எல்லோரும் வாழ்வில் ஒரு முறையேனும் கங்கைக்கு சென்று நீராடி தமது பாவத்தை குறைத்து கொள்கிறார்கள்.. ஆனால், இப்படி பல்வேறு தரப்பினரது பாவத்தை சுமக்கும் கங்கை தன்னை எப்படி மீண்டும் தூய்மை படுத்தி கொள்கிறாள் என்ற ஒரு கேள்விக்கு விடை தேடும் பொழுது தான் "தென் இந்தியாவின் கடைக்கோடியில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில்" உள்ள "தாமிரபரணி" நதியின் சிறப்பை அறிய முடிந்தது... "தாமிரபரணி" நதியினை பற்றி படிக்க, படிக்க அதன் தொன்மையான வரலாறு, பல்வேறு இதிகாசங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அதனை பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது... எனவே, அப்படிப்பட்ட "தாமிரபரணி" நதியின் பெருமைகளை தொடர்...