திருநெல்வேலி அருள்மிகு ஸ்வாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்... தென்னாடுடைய சிவனே போற்றி .... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி .... தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி டவுணில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் வருகின்ற 27-04-2018 அன்று மஹா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாகவும் சீரும், சிறப்புடனும் கொண்டாடப் பட உள்ளது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி வருகை தரும் பக்தர்களுக்கு (சுமார் 1 லட்சம் பேருக்கு ) அன்னதானம் செய்ய உத்தேசிக்க பட்டுள்ளது. தானத்தில் சிறந்த அன்னதானத்தில் தாங்களும் பங்கேற்க விரும்பினால் பொருளாகவே கொடுத்து அடியார்களின் அன்னதானத்திற்கு உதவி புரிந்து ஈசனின் அருளை பெறலாம்... தேவைப்படும் பொருள்கள் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது... அதில் தங்கள் மனதிற்கேற்ப எவ்வளவு முடியும் என்று நினைக்கீறீர்களோ அந்த அளவு உதவி புரியலாம்... தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது... இது சம்பந்தமாக வேறு ஏதேனும் விபரம் / ...