"ஆர்யம் மற்றும் திராவிடம்" - உண்மையான பொருள் என்ன ? தற்போதைய கால கட்டத்தில், தம்மை மிகவும் மேதாவிகளாக காட்டிக்கொள்ள ஒரு சிலர் ஆர்யம் மற்றும் திராவிடம் என்று பேசுவது வாடிக்கையாகி உள்ளது... ஆனால், இது ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சாஸ்திர விளக்கங்களுடனும், மொழி ஒப்பு இயல் விளக்கங்களுடனும் அன்றே காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் மிக எளிதாக என்னை போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார்... அதனை அப்படியே இங்கு தங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன் ... சற்றே பெரிய பதிவு தான் என்றாலும், கடந்த 70 ஆண்டு கால அரசியலால் நாம் எந்த அளவு குழப்ப பட்டுள்ளோம் என்பதற்கு ஒரு மிக சரியான விளக்கம், இந்த கட்டுரையை படிக்கும் 15 நிமிடங்களில் நமக்கு கிடைக்கும்... த்ராவிட விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்க...