Skip to main content

Posts

Showing posts from November, 2017

நெல்லிக்காய் பற்றி அறியாத பல அரிய தகவல்கள் ...

நெல்லிக்காய் = செவிலித்தாய் !!!  மருந்துப்பொருள்களில் தாயாராகும் வாய்ப்புக் கடுக்காய்க்கும் , செவிலித்தாயாகும் வாய்ப்பு நெல்லிக்காய்க்கும் உண்டு . கடுக்காயை   தசமாதா ஹரீதகீ   என்றும் , நெல்லிக்காயை   தாத்ரீ   என்றும் அழைப்பர் . இரண்டிற்கும் பலவகைகளில் ஒற்றுமை உண்டு . இரண்டும் உப்புசுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளவை . கடுக்காய் கிடைக்காவிடத்திலும் கடுக்காயைப் பயன்படுத்தமுடியாமல் ஆனால் அதே குணமுள்ள பொருள் ஒன்றைப் பயன்படுத்த வேண்டியவிடத்திலும் நெல்லிக்காயை உபயோகிக்கலாம் .  ஹரீதகீம் பஞ்சரஸாமுஷ்ணாமலவணாம் சிவாம்   தோஷானுலோமனீம் லக்வீம் வித்யாத் தீபனபாசனீம்   ஆயுஷ்யாம் பௌஷ்டிகாம் தந்யாம் வயஸஸ்தாபனீம் பராம்   யாந்யுக்தானி ஹரீதக்யா வீர்யஸ்யது விபர்யய : என்கிறார் சரகர் . தாய் உதவமுடியாத நிலையில் செவிலித்தாய் உதவுவதுபோல கடுக்காய் ( மாதா ) உதவமுடியாத நிலையில் உணவாகவும் மருந்தாகவும் நெல்லிக்காய் ( தாத்ரீ ) பயன்படுகிறது . திரிபலை என்ற முக்கனிக் கூட்டில் இவ்விரண்டிற்குமே இடமுண்டு . ம...