திரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...
இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.
இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.
மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே.
அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.
அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.
அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.
என்ற திருமந்திர பாடல் வரிகளில் திரு அம்பலச் சக்கரம் தயாரிக்கும் முறையை தெளிவாகக் கூறுகிறார் திருமூலர். இந்த பாடல் வரிகளைக் கொண்டு உருவாக்கப் பட்ட திருவம்பல சக்கரத்தின் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.
இந்த சக்கரத்தை தங்கத் தகட்டில் அல்லது செப்புத்தகட்டில் கீறி (தற்பொழுது சென்னை கிரி ஸ்டோர்ஸ்-ல் கிடைக்கிறது) தூய இடத்தில் வைத்து தினமும் மாலை வேளைகளில் நமசிவாய என்று 1008 தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு, அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் சொல்லி உருக்கொடுத்தால் இந்த சக்கரம் தொழிற்படத் தொடங்குமாம்.
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
இந்த திருஅம்பலச் சக்கரமே பூமி முழுதும் பரந்துள்ளது, இதுவே இறைவன் நடனம் புரியும் பரந்த வெளியிலும் உள்ளது திருஅம்பலச் சக்கரத்தை எமக்கு நந்தி தேவர் அருளினார், தாயிடமிருந்து கன்று பால் எடுப்பது போல திரு நந்தி தேவர் இறைவனிடமிருந்து பெற்று எனக்கு அருளினார்.
திரு அம்பலச் சக்கரத்திற்கு பல செயற்பாடுகள் உண்டு திருவம்பலச் சக்கரதினுள்ளே ஐந்து வகையான குறிகள், ஐந்து வகையான தொழில்கள் உண்டு.
இந்த திருவம்பல சக்கரம் இறைவனின் கூத்தின் வடிவமாக விளங்கும். இதை வைத்திருப்பவர் பெறும் பயன்கள் எழுத்தில் அடங்காதவை என்கிறார் திரு மூலர்.
ஓம் நம சிவாய ...
Comments
Post a Comment